ஏவிஎம் நிறுவனம் வசூல் வேட்டை ஆடிய லோ பட்ஜெட் படம்.. வசூல் சாதனையில் அமேசான் ஓடிடி வரை சூப்பர் ஹிட்

AVM Productions: 60களின் காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அடையாளமாக இருப்பது ஏவிஎம் நிறுவனம். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை ஏராளமாக கொடுத்திருக்கிறது. முன்னணி ஹீரோக்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் அதே நேரத்தில் நிறைய லோ பட்ஜெட் படங்களை எடுத்து அதில் மிகப்பெரிய வெற்றியை கண்டதும் இந்த நிறுவனம்தான். அதிலும் முக்கியமான ஒரு படம் அந்த நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் எதார்த்தமான குடும்ப கதைகள் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த குடும்ப கதை அமைப்பில் மிகச்சிறந்த இயக்குனர் தான் விசு. இவர் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் படத்தின் கதையை ஏவிஎம் நிறுவனத்திற்காக எழுதி முடித்த பிறகு, தன்னுடைய படம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஏவிஎம் நிறுவனம் தயாரித்த திரைப்படம் தான் சம்சாரம் அது மின்சாரம்.

Also Read:ஏவிஎம் நிறுவனத்தை ஒரேடியாக சாய்த்த ஹீரோக்கள்.. கொஞ்ச நஞ்சமா ஆட்டம் ஆடுறாங்க

லட்சுமி, ரகுவரன், விசு, கமலா காமேஷ், வாகை சந்திரசேகர், மாதுரி போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 15 லட்சம் மட்டுமே. இந்த படத்தில் முக்கிய அமைப்பு அந்த வீடுதான். ஏவிஎம் நிறுவனம் இரண்டே மாதத்தில் அந்த வீட்டை செட் போட்டு அமைத்துக் கொடுத்திருக்கிறது. படம் முழுக்க அந்த வீடு தான் ஒரு ஹீரோ போல் இருந்தது என்று கூட சொல்லலாம்.

அழகான கூட்டு குடும்பம், அதில் ஏற்படும் பிளவு அதை சரி செய்ய முயலும் மூத்த மருமகள் என நகரும் இந்த கதை அமைப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூலில் வேட்டையாடியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வருடத்திற்கான தேசிய விருது, பிலிம் பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வாங்கியது. படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி பெங்காலி மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.

Also Read:4 தலைமுறைகளாக நம்பர் ஒன்னில் இருக்கும் ஏவிஎம்.. சிவாஜி படம் தான் எங்கள் முதல் அஸ்திரம்

எதார்த்தமான கதைகளத்தை கொண்ட இந்த படத்தை வெறும் 40 நாட்களில் படமாக்கி இருக்கிறார்கள் படக்குழு. இந்த படத்தில் மற்றும் ஒரு சுவாரசியமான சம்பவம் என்னவென்றால் இதில் வரும் கண்ணம்மா கேரக்டர் தயாரிப்பாளரின் வற்புறுத்தல் பெயரிலேயே வைக்கப்பட்டு இருக்கிறது. காமெடி கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு வந்தால் கதை நீர்த்துப் போகும் என்று விசு நினைத்திருக்கிறார். ஆனால் இந்த கேரக்டர் இந்த படத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது.

1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 2K கிட்ஸ் வரை இந்த படத்தை ரசிக்கிறார்கள். அமேசான் ஓடிடி தளத்தில் இந்த படம் அதிக பார்வையாளர்களால் தேடப்பட்டு பார்க்கும் ஒரு படமாகவும் இருக்கிறது. சம்சாரம் அது மின்சாரம் படம் ரிலீஸ் ஆகி 30 வருடங்கள் கழித்தும் இன்றும் பேசப்படுவதற்கு இயக்குனர் விசு மட்டுமே காரணம். ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:தமிழ் சினிமாவை வாழ வைத்தும் காணாமல்போன 7 பெரும் முதலாளிகள்.. ரீ-என்ட்ரியில் தெறிக்கவிடும் ஏவிஎம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்