ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

4 தலைமுறைகளாக நம்பர் ஒன்னில் இருக்கும் ஏவிஎம்.. சிவாஜி படம் தான் எங்கள் முதல் அஸ்திரம்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்து நிலைத்து நிற்கும் நிறுவனம் தான் ஏவிஎம் ப்ரொடக்ஷன். ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனம் நான்கு தலைமுறைகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த நிறுவனம் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறது. அதிலும் இவர்களின் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சிவாஜி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பல விருதுகளை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்திற்கு பிறகு பல திரைப்படங்களை தயாரித்து வந்த இந்த நிறுவனம் சமீப காலமாக எந்த படங்களையும் தயாரிக்கவில்லை.

இருப்பினும் இந்த நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இதற்கு சில காரணங்களும் இருக்கிறது. அதாவது படத்தின் வெற்றிக்காக தேவையில்லாத காட்சிகளை சேர்க்கும் இந்த காலகட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் மட்டுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

மேலும் இயக்குனர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் இந்த நிறுவனம் செய்யும். அநாவசியமாக எந்த விஷயத்திலும் இவர்களின் தலையீடு இருக்காது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

மேலும் தேவையில்லாத எந்த செலவுகளும் இவர்களின் படத்தில் இருக்காது. அதை எல்லாம் பார்த்து பார்த்து தான் இவர்கள் படங்களை தயாரித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் ஒரு டீ க்கு செலவு செய்தால் கூட அது வரவு செலவு கணக்கில் வந்துவிடுமாம்.

இப்படி எல்லாம் ஒவ்வொன்றையும் சரியாக திட்டமிட்டு தான் இத்தனை தலைமுறைகளை தாண்டியும் இந்த நிறுவனம் ஒரு வெற்றி நிறுவனமாக இருக்கிறது. அந்த விதத்தில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட சினிமா தொழிலாளர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

Trending News