Blue Star Movie Review – சிக்ஸர் அடித்ததா அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்.. முழு விமர்சனம் இதோ!

Blue Star Movie Review : இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பு என்றாலும் அவருடைய பட சாயலில் தான் ப்ளூ ஸ்டார் படம் அமைந்திருக்கிறது. சாதிய அரசியல் பேசும் படமாக தான் ப்ளூ ஸ்டார் வெளியாகி இருக்கிறது. படத்தின் கதாநாயகன் அசோக்செல்வன் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் அணியில் இருக்கிறார்.

அவருக்கு எதிர் அணியாக சாந்தனு ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் ஆல்ஃபா பாய்ஸ் என்ற அணியில் இருக்கிறார்கள். பொதுவாகவே இரண்டு கிரிக்கெட் அணிகள் இருந்தால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை நடக்கும் என்பதை எதார்த்தமாக இயக்குனர் கூறியிருக்கிறார்.

அதிலும் சாதிய அரசியலால் என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதை காட்டியிருக்கிறார். இரு அணிகளும் ஒன்றாக இணைந்தால் அவர்களது பலம் எப்படி இருக்கும் என்பதை ப்ளூ ஸ்டார் படம் காட்டி உள்ளது. படத்தில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இடையே ஆன காதல் காட்சிகள் மனதை வருடுகிறது.

Also Read : எந்த சப்போர்ட்டும் இல்லாமல் 2023 ஜெயித்த 3 ஹீரோஸ்! பெரிய கையை வளைத்து போட்ட அசோக் செல்வன்

ப்ளூ ஸ்டார் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இடம்பெற்ற காதல் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. எப்போதும் போல அசோக் செல்வன் தன்னுடைய சினிமாவில் அடுத்த கட்டத்தில் செல்வதற்கான சரியான படத்தை ப்ளூ ஸ்டார் மூலம் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சாந்தனு படத்தின் துணை நாயகனாக நடித்திருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு புரிதலுடன் நடித்திருக்கிறார். படத்தின் சில காட்சிகள் இதுதான் வரும் என அடுத்தது ரசிகர்கள் நினைத்தபடியே காட்சியை அமைத்திருக்கிறார்கள். மேலும் அசோக் செல்வன் சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்த ஃபோரை அடித்துள்ளார்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்