எந்த சப்போர்ட்டும் இல்லாமல் 2023 ஜெயித்த 3 ஹீரோஸ்! பெரிய கையை வளைத்து போட்ட அசோக் செல்வன்

2023 success tamil actors without any background: இந்திய சினிமாவை நெப்போடிசம் மூலம் ஆட்டி வைத்து  தகுதியுடன் வரும் இளம் தலைமுறைகளை வாட்டி வதைப்பது ஆங்காங்கே அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது. தகுதியுடன் புதிய சிந்தனையோடு வருபவர்களை கதற வைக்கின்றனர் வாரிசு நடிகர்கள். அதையும் மீறி ஜெயிப்பது என்னவோ ஆண்டவனின் கட்டளையாக இருக்கிறது.

அப்படியாக எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியிலேயே கடின உழைப்புடன் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த  நடிகர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.  அவர்களில் சிலர்,

மணிகண்டன்:  சின்னத்திரையின் மிமிக்ரி ஷோ மூலமாக வெற்றி பெறாத  போட்டியாளரான இவர் தனது கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம் இன்று பார் போற்றும் கலைஞராக வெற்றிச் செருக்குடன் ரசிகர்களின் மனதை ஆண்டு வருகிறார்.  இந்தியா பாகிஸ்தான், ஜெய் பீம், விக்ரம் வேதா, குட் நைட் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவரின் அடுத்த படம்  அறிமுக இயக்குனர் பிரபு  ராம்இயக்கத்தில் லவ்வர்.

Also Read: 2023ல் வெளியான தரமான 10 படங்கள்.. ரசிகர்களால் கொண்டாடப்படும் போர் தொழில், குட் நைட்

கவின்: நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்துடன்  சின்னத்திரை தொடர்கள் மற்றும் பிக் பாஸின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட கவின். தொடக்கத்தில் வெளிவந்த படங்களில் கொஞ்சம் சறுக்கினாலும் லிப்ட் மூலம்  உயரே எழுந்தார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த டாடா வெற்றி பெறவே புகழின் உச்சிக்கு சென்ற அவர் தனது மார்க்கெட்டை உயர்த்தி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

அசோக் செல்வன்: கல்லூரி காலம் தொட்டு நடிப்பின் மீதான ஆர்வத்தில் பல  ஆடிஷன்களில் கலந்து கொண்ட அசோக் செல்வனுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு சூது கவ்வும். ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்குள் தன்னை புகுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.

பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் தன்னுடன் நடித்த தயாரிப்பாளர் மற்றும்  நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தியை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் புரிந்துள்ளார்.

Also Read: சின்ன தூண்டில்ல மொத்த கஜானாவையும் ரொப்பிய 5 படங்கள்.. ஜம்முனு செட்டிலான அசோக் செல்வன்

- Advertisement -spot_img

Trending News