ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அவ்வளவு சம்பளம்லாம் கொடுக்க முடியாது.. விஜய்யும், சன் பிக்சரும் சேர்ந்து செய்த பெரிய துரோகம்

நிறைய சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த பிரபல இயக்குனர் ஒருவரை விஜய் கழட்டி விட்டுள்ளார். எப்பொழுதுமே பட்ஜெட்டில் கரராக இருக்கும் சன் பிக்சர்ஸ்சும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளது. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் வெறும் காசுக்காக இப்படி ஒரு பெரிய இயக்குனர் வாழ்க்கையில் விளையாடி இருக்கின்றனர்.

விஜய்க்கு துப்பாக்கி, சர்க்கார் போன்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் ஏ ஆர் முருகதாஸ். இவருக்கு இப்பொழுது கொஞ்சம் டல் டைம் என்று சொல்லலாம். நிறைய பெரிய ஹீரோக்களிடம் கதை சொல்லி எல்லோரும் இவரை நிராகரித்து விட்டனர். இப்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்ணுகிறார்.

Also read: இப்படி வீடியோ போட்டு மானத்தை வாங்கனுமா? லியோ 1000 கோடி வசூல் இருக்கட்டும் இதுக்கு பதில் சொல்லுங்க விஜய்

பீஸ்ட் படத்திற்கு முன்னர் விஜய், ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டியதாக தான் முதலில் இருந்தது .ஆனால் அது கைவிடப்பட்டது அந்த நேரத்தில் ஏ ஆர் முருகதாஸ் படங்கள் என்றாலே எப்பொழுதும் சர்ச்சையை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி ஏதாவது ஒரு இயக்குனர் இவர் என் கதையை திருடிவிட்டார் என்று சண்டைக்கு வருவார்.

இப்படி பல போராட்டங்கள் ஏற்கனவே நடந்துள்ளது .இருந்தாலும் கூட விஜய் இவருக்கு பீஸ்ட் படம் நடிப்பதற்கு முன்னர் ஒரு படம் கொடுத்துள்ளார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் படத்திற்கு முருகதாஸ் பெரிய பட்ஜெட் போட்டுள்ளார்.

Also Read : விஜய், அர்ஜுனுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இல்லை.. லோகேஷ் மேல் பாய்ந்த ப்ளூ சட்டை மாறன்

சன் பிக்சர்ஸ் முருகதாஸிடம் பெரிய பட்ஜெட் படம் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் மற்றும் விஜய் யாராவது ஒருவர் சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை .ஏ ஆர் முருகதாஸ் விஜய் இடம் பேசி பார்த்தும் பிரயோஜனமில்லை .

இதனால் விஜய் காசு இருந்தால் பண்ணலாம், இல்லை என்றால் கைவிட்டு விடலாம் என்று அதிரடியாக கூறிவிட்டார். இது முருகதாஸுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலிருந்து விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸும் எந்த ஒரு படத்திலும் இணைந்து வேலை செய்யவில்லை.

Also read: விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்

- Advertisement -

Trending News