புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜயகாந்துக்கு இதை செய்யாமல் விஜய் அரசியலில் ஜொலிக்க முடியாது.. நன்றி கெட்டவன் என்ற பெயர் தேவையா!

Vijaykanth Vs Vijay: விஜய் அரசியலில் வரப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தி அதற்கான வேலைகளை வேகப்படுத்தி இருக்கிறார். மாணவர்கள் உதவி செய்வது பல ஏழைகளுக்கு உதவி செய்வது என தொடர்ந்து செய்து வருகிறார். தற்பொழுது சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மாலை போடுமாறு அவரது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்.

இந்த நேரத்தில் விஜய் செய்த கெட்ட செயல்கள் வெளியே வருகிறது. அதாவது விஜய் சினிமாவில் நன்றாக வருவதற்கு அவரது அப்பா எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு விஜயகாந்த் முக்கியம். சினிமாவை விட்டு போய்விடலாம் என்று நினைத்த நேரத்தில் விஜயகாந்த் கை கொடுத்து விஜயை தூக்கி நிறுத்தினார் இன்று வெற்றி பெற்றுவிட்டார் விஜய்.

Also Read : சென்சாரையே காது கிழிய கதறவிட்டாரா லோகேஷ்.? விஜய் மார்க்கெட்டை உடைக்க வெளியான போலி சர்டிபிகேட்

விஜயகாந்த் பல வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார். அவரை இன்று வரை விஜய் பார்க்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதேபோல் விஜயகாந்த் மகன் படங்களில் நடித்து வருகிறார் ஆனால் சொல்லும் படியாக வெற்றி பெற முடியவில்லை. விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் அவரை பெரிய நடிகராக மாற்றி இருப்பார் ஆனால் அவரால் முடியவில்லை.

இப்பொழுது விஜய், விஜயகாந்தையும் பார்க்கவில்லை விஜயகாந்த் மகனுக்காவது படங்களில் முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்கலாம். அல்லது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விஜய் நடித்துக் கொடுத்து படத்தை ஓட வைக்கலாம் இதுவரை எதையும் செய்யவில்லை. விஜய்க்கு சினிமா மட்டுமே முக்கியம் என்று இருந்த நேரத்தில் இந்த விஷயம் பெரிதாக பார்க்கவில்லை. ஆனால் விஜய் தற்பொழுது அரசியலில் ஈடுபட போகிறார்.

Also Read : இப்படி வீடியோ போட்டு மானத்தை வாங்கனுமா? லியோ 1000 கோடி வசூல் இருக்கட்டும் இதுக்கு பதில் சொல்லுங்க விஜய்

இனிமேல் விஜய் செய்த செயல்கள் எல்லாம் வெளியே கொண்டு வந்து விஜய் அசிங்கப்படுத்த கூடும். விஜய்யை நன்றி கெட்டவர் என்று சொல்லக்கூடும். இதை மாற்ற வேண்டும் அதற்கு விஜய் கூடிய விரைவில் செய்த தவறை திருத்தி விஜயகாந்தை சந்தித்து அவரது மகனுக்கு சில உதவிகளையும் செய்ய வேண்டும்.

அப்படி விஜய் செய்யாமல் ஊருக்கு மட்டுமே உதவி தனக்கு உதவி செய்தவருக்கு கண்டு கொள்ள மாட்டேன் என்று இருந்தால். இந்த அரசியலில் இவர் பெரிய மாற்றத்தை மற்றும் அவமானத்தையும் சந்திக்க நேரிடும். ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் இவரை ஒதுக்கி வைத்து விட்டனர், அடுத்து விஜயகாந்த் ரசிகர்களும் இவரை ஒதுக்கி வைத்து விட்டால் யாரை நம்பி இவர் தேர்தலில் நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை. விஜய் சிந்தித்து செயல்பட்டால் அரசியலில் வெற்றி பெறலாம் நல்ல பெயரையும் வாங்கலாம்.

Also Read : 200 கோடி சம்பளம் வாங்கிட்டு டீலில் விட்ட விஜய்.. ஒரு அடி எடுத்து வச்சா பத்து அடி சறுக்குது

- Advertisement -

Trending News