ஆறடி ஹீரோட்ட அர்ஜுன் தட்டிப்பறித்த ஆக்சன் கிங் டைட்டில்..கேப்டன் கூப்பிட்டு கொடுத்த வாய்ப்பு

Arjun knocked away the title of Action King from the six-foot hero arun pandian: தமிழ் சினிமாவின் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் அருண்பாண்டியன். 1985 ஆண்டு விசுவின் சிதம்பர ரகசியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 80ஸ் மற்றும் 90ஸ்  காலகட்டத்தில் ஆறடி உயரத்துடன் அதிகமான பெண் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் அருண். 

காதல்,காமெடி என மசாலா படங்களை விட ஆக்சன் படங்கள் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அருண்பாண்டியனுக்கு, கேப்டன் விஜயகாந்தின் அறிமுகம் அவரது சினிமா கேரியரில் நல்ல ஒரு மாற்றத்தை தந்தது. 

1986 ஆம் ஆண்டு திரைப்படக் கல்லூரி மாணவர் ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் திரைப்படத்தில் அருண் பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுத்தார் கேப்டன். இந்த திரில்லர் திரைப்படத்தில் புரட்சிகரமான கருத்துகளோடு  ஆக்ஷனில் பொளந்து எடுத்த அருண்பாண்டியனின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

Also read : 11 வருடம் கழித்து ரீமேக் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி தரும் அருண்பாண்டியன்.. வைரலாகும் அன்பிற்கினியாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அருண் பாண்டியனின் சாதனையில் மற்றொரு மகுடமாக அமைந்த திரைப்படமே இணைந்த கைகள், ஆக்சன் உடன் அந்தி நேர தென்றல் காற்று என்று  பார்வையாளர்களின் மனதை வருடிய  அருண்பாண்டியனுக்கு வரவேண்டிய ஆக்சன் கிங் பட்டத்தை , அப்போது ஜெய்ஹிந்த் போன்ற ஆக்சன் படங்களின் வெற்றியால் வளர்ந்து வந்த அர்ஜுன் அப்பட்டத்தை தட்டிப் பறித்தார் என சினிமா ஆர்வலர் பேட்டி ஒன்றில் குறிப்பிடிந்தருந்தார். 

சினிமாவை தாண்டி சமூக சேவைகள் ஆற்றி வந்த அருண்பாண்டியனை விஜயகாந்த் தன் கட்சியில் இணைத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தார். ஒரு சமயம் கருத்து வேறுபாடுகளால் முரண் ஏற்படவே நேரே விஜயகாந்தின் அலுவலகம் சென்று அவரை தகாத முறையில் கோபத்தில் திட்டினாராம்.

அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட விஜயகாந்த் முதல்ல உக்காரு பாண்டி என்று சமாதானப்படுத்திய கதையை கேப்டன் மறைவின் போது நினைவுகூர்ந்தார் அருண் பாண்டியன். இவரின் கலைவாரிசு கீர்த்தி பாண்டியன் தனித்துவமான படங்களில் நடித்து அவரது பெயரை நிலை நிறுத்தியுள்ளார். சமீபத்தில் அருண்பாண்டியனின் மகளுக்கும் ப்ளூ ஸ்டார் அசோக் செல்வனுக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: ஹனிமூன் மூட்டில் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி பாண்டியன்.. செம க்யூட்டான புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்