Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி எல்லாம் பேச உனக்கு தகுதி இருக்கா.? அக்கட தேசத்து நடிகருடன் சண்டை செய்து பதிலடி கொடுத்த பயில்வான்

ரஜினியை பற்றி பொது மேடையில் பேசிய அகட தேசத்தின் நடிகரை விளக்கிய பயில்வான் ரங்கநாதன்.

rajini-bailwan

Bailwan Ranganathan: சோசியல் மீடியாவில் எப்பொழுது மக்கள் அதிகமாக ஆக்டிவ் ஆனார்களோ, அப்பொழுதே மூலை முடுக்குகளில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் அனைவரது பார்வைக்கும் வந்துவிடுகிறது. அந்த வகையில் சினிமாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் சமூக வலைதளங்களில் மூலம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அப்படித்தான் பல பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூபின் மூலம் பேசி வருகிறார் பயில்வான். அந்த வகையில் தற்போது ரஜினியை பற்றி அக்கட தேசத்து நடிகர் ஒருவர் பொது மேடையில் கூறிய விஷயத்திற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் பயில்வான்.

Also read: சூட்டிங் ஸ்பாட்டில் தொடையழகியுடன் குடுமிபிடி சண்டை போட்ட ராய் லட்சுமி.. சீக்ரெட்டை உடைத்த பயில்வான்

அதாவது விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது. இப்படம் தெலுங்கில் உருவாகி, தமிழ் கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகுது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் சம்பந்தமாக பட குழுவில் உள்ள அனைவரும் முழுமூச்சாக வேலை பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டா இந்தியா முழுவதும் சென்று குஷி படத்திற்கு பிரமோஷன் செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கோயமுத்தூரில் நடைபெற்ற பிரமோஷனுக்கு விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டிருந்தார். அப்பொழுது பத்திரிகைக்காரர்கள் இவரிடம் நீங்கள் நடித்த படம் தொடர்ந்து தோல்வியை அடைந்து வருகிறது அதற்கு என்ன காரணம் என்று கேட்டிருக்கிறார்கள்.

Also read: முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவ்விய ரஜினி, கமலின் படங்கள்.. ஹைஃபை ஏற்றி படுதோல்வியான சம்பவம்

அதற்கு இவர், ரஜினி சாருக்கு ஆறு படம் தோல்வியாயிருக்கிறது. அவர் துவண்டு போகாமல் தொடர்ந்து நடித்ததால் தான் ஜெயிலர் படம் தற்போது 500 கோடி வசூலை தாண்டி வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல தான் நானும், என்னுடைய படங்கள் தோல்வி அடைந்தால் உடனே காணாமல் போய் விடணுமா என்ன, தொடர்ந்து முயற்சியை கொடுத்து வெற்றி அடைவேன் என்று கூறியிருக்கிறார்.

இவர் இப்படி பேசியதற்கு சினிமா விமர்சனம் செய்யக்கூடிய பயில்வான் எங்கு வந்து யாரைப்பற்றி பேசுற, ரஜினி எல்லாம் பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு. உன்னுடைய படம் ஓடவில்லை ஏன் என்று கேட்டால் அதற்கு மட்டும் பதில் சொல். அதை தவிர்த்து தேவையில்லாத விஷயத்தை சொல்லி ரஜினியை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று விஜய் தேவர கொண்டாவுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் பயில்வான்.

Also read: சமந்தாவை விடாமல் துரத்தும் அந்தப் பிரச்சனை.. மேடையிலேயே உருகிய விஜய் தேவரகொண்டா!

Continue Reading
To Top