புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிவகார்த்திகேயனை பாதியிலேயே கழட்டிவிட்ட அனிருத்.. பின்னால் இருக்கும் காரணம்

பொதுவாக சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே அதில் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று சொல்லும் அளவுக்கு இவர்களது காம்போவில் நிறைய படங்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த புதிதில் இமான் இவருடைய படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அனிருத் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். இப்போது அவரின் அடுத்த படத்தில் அனிருத் இசையமைக்க வில்லையாம்.

Also read: தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த சிவகார்த்திகேயன்.. சீமராஜா படத்திற்கு வாங்கிய சம்பளம்

அதாவது சிவகார்த்திகேயனின் படத்தை நிராகரிக்க பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அனிருத் வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதுமட்டும்இன்றி கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். அஜித்தின் ஏகே 62 படத்தில் கூட முதலில் அனிருத் ஒப்பந்தமாக விரும்பவில்லை.

ஏனென்றால் அவர் படு பிசியாக உள்ளதால் இந்த படத்திற்கு இசையமைக்க நேரம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஏகே 62 படக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அனிருத் ஒற்று கொண்டுள்ளார். இதனால் தான் சிவகார்த்திகேயன் படத்தில் இசையமைக்க முடியாது என வேண்டுகோள் வைத்துள்ளார்.

Also read: கோடிகளை வாரி இறைத்தும் சிக்காத சில்வண்டு.. பெரிய கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய அனிருத்

மேலும் அனிருத்தின் நிலைமையை புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷை புக் செய்து உள்ளார். இப்போது ஜிவி பிரகாஷ் நடிகராக கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். கிட்டத்தட்ட 7 படங்களுக்கு மேல் அவரின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது.

இப்போது நடிப்பை காட்டிலும் சற்று படங்களில் இசையமைக்க ஜிவி பிரகாஷ் ஆர்வம் காட்டி வருகிறார். மெலோடி கிங்காக இருக்கும் ஜிவி பிரகாஷ் சிவகார்த்திகேயனுக்கு அருமையான பாடல்களை தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது.

Also read: கமலுக்காக ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்.. விரைவில் வெளிவர இருக்கும் புதிய அப்டேட்

- Advertisement -

Trending News