மீண்டும் மணிவண்ணனை ஞாபகப்படுத்தும் நடிகர்.. சத்தமே இல்லாமல் ராஜாக்கிளி செய்யும் வேலை

எத்தனையோ இயக்குனர்கள் நடிகர்களாக மாறி பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அனைவரது நடிப்பும் ரசிகர்களின் மனதில் நிற்பதில்லை. சிலர் மட்டுமே தங்களது நடிப்பு, வசனம் சொல்லும் விதம் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் விரும்பும் வகையில் நடிப்பர். அப்படிப்பட்ட நடிகர்களுள் ஒருவர் தான் மணிவண்ணன், இவரது, நக்கல், நய்யாண்டி, காமெடி, சென்டிமென்ட் என எல்லாவற்றிலும் பின்னி பெடலெடுப்பார்.

அதுவும் நடிகர் சத்யராஜின் படங்களில் இவரை அதிகமாக பார்க்கலாம், அதிலும் அமைதிப்படை திரைப்படத்தில் இவர்களின் காம்போ பெருமளவில் இன்றுவரை பேசப்பட கூடியவை. மேலும் மணிவண்ணனின் கால்ஷீட் கிடைக்க 90 காலக்கட்டத்தில் பல இயக்குனர்கள் தவம் கிடந்த சம்பவங்களும் உள்ளது. அப்படிப்பட்ட நடிகர் மணிவண்ணன் மறைந்திருந்தாலும், இவரை போல இன்னொரு நடிகரை இன்றுவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை.

Also Read: இயக்குனர்கள் வில்லனாக மாஸ் காட்டிய 5 படங்கள்.. அரசியல்வாதியாக மிரட்டிய மணிவண்ணன்

ஆனால் சத்தமே இல்லாமல் பிரபல நடிகர் ஒருவர், மணிவண்ணன் பாணியில் தற்போது தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவரும் மணிவண்ணன் போலவே இயக்குனராக அறிமுகமாகி படங்களிலும் நடித்து இன்று இவருக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று , பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

மனுநீதி திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் தான் தம்பி ராமையா. இவர், தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் ராஜகிளியாக வந்து பல லூட்டிகளை செய்வார். அதேபோல சாட்டை, சாட்டை2, தனி ஒருவன், புலி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தனது நகைச்சுவையான நடிப்பால் பிரபலமானவர்.

Also Read: கவுண்டமணியை ஒதுக்கிய மணிவண்ணன்.. இந்த ஒரு சீனால் சூப்பர் ஹிட் படத்தை இழந்த காமெடியன் 

தற்போது இவரது கைவசம் 2, 3 திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் மறைந்த நடிகர் மணிவண்ணன் பாணியில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக மணிவண்ணன் பல படங்களில் அரசியல்வாதியாக காட்சியளிப்பார். இதனிடையே தம்பி ராமையாவும் ஒரு திரைப்படம் முழுவதும் அரசியல்வாதியாக நடித்து வருகிறாராம்.

இப்படத்தை தம்பி ராமையாவின் மூத்த மகனான நடிகர் உமாபதி ராமையா முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகி இயக்கி வருகிறார். இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் இயக்கி, நடித்த திருமணம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர். இந்நிலையில் நடிகர் மணிவண்ணன் போலவே அரசியல்வாதியாக தம்பி ராமையா நடித்துவரும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Also Read: தம்பி ராமையாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய இயக்குனர்.. அவர் இல்லாமல் இவர் படம் வெளிவராது

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -