திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

இந்தியாவின் பணக்கார பாடகர் இவருதான்.. டாப் நடிகர்களுக்கு இணையான சொத்து மதிப்பு.. ஆத்தாடி இத்தனை கோடியா?

உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஆண்டுதோறும் பல மொழிகளில் இருந்து நூற்றுக் கணக்கான படங்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசாகின்றன. ஒரு படத்தை நாம் 2 ½ மணியிலிருந்து 3 மணிரத்திற்கு தியேட்டரில் ரசிகர்கள் பார்த்து மகிழ்வதாக இருந்தாலும், இத்திரைப்படத் தொழிலின் மூலம் மூலம் பல கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், சினிமாவில் 24 துறைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், நடனக் கலைஞர், பாடகர்கள் உள்ளிட்டோரின் பெயர்தான் ரசிகர்களால் அறியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரு படத்தின் வெற்றிக்கு இத்தகையோரின் பங்களிப்பு இருந்து வரும் நிலையில், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் பங்களிப்பு என்பது அப்படம் ரிலீசான பின்னும் அதன் பாடல்கள், காலம் கடந்தும் பேசப்படுகின்றனர். மக்களின் இன்பம், துன்பம், சந்தோஷம், துக்கம் ஆகிய தருணங்களில் வாழ்வியலோடு கலந்த ஒன்றாக இருந்து வருகிறது.

சினிமாவில் பிரபல பாடகர்கள்

அப்படி, இந்தியாவின் பிரபல பாடகர்களாக ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இளையராஜா, ஹரிஹரன், சங்கர் மகாதேவன், ஹனிசிங், ஏ. ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், சுஜாதா உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திறமையானர்களாக உள்ளனர்.

இந்தியாவில் அதிகளவில் பின்னணிப் பாடகர்கள் இருப்பினும் இந்தியாவின் பணக்கார பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் மணிரத்னம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ. ஆர். ரஹ்மான். அப்போது முதல் கோலிவுட், பாலிவுட், மல்லுவுட், டோலிவுட், ஹாலிவுட் ஆகிய படங்களில் தொடர்ந்து இசையமைத்தும் பாடல்களைப் பாடி வருகிறார். இதுவரை தன் 30 ஆண்டுகள் சினிமா தொழிலில் மட்டும் 2000 பாடல்களை இசையமைத்துள்ளார். அதில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்தான்.

ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடவில்லை என கூறப்படும் நிலையில், ரோஜா முதல் பொன்னியின் செல்வன் படம் என இதுவரை 7 தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வென்றிருக்கிறார். அவரது வந்தே மாதரம் உள்ளிட்ட தனி ஆல்பம் பாடல்கள் படத்தின் பாடல்களை தாண்டி வெற்றி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படத்திற்கு இசையமைக்க 8 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகவும், அதேபோல் ஒரு மேடை நிகழ்ச்சியில் அவர் ஃபெர்பாமென்ஸ் பண்ண 2 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டு சம்பளம் & அதிக சொத்து மதிப்பு

அதன்படி, மாதம் சராசரியாக 3 கோடி முதல் 4 கோடி வரை வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில், ஆண்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் 50 கோடி முதல் 60 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும், இவர் வீட்டில் பென்ஸ், பிஎம்டபள்யூ, வால்வோ, ஆடி உள்ளிட்ட வெளிநாட்டு கார்கள் உள்ளதாகவும் இவரிடம் 1,700 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகின்றன.

அதனால், இந்தியாவின் அதிக சொத்து மதிப்புள்ள இசையமைப்பாளர், பாடகராகவும் ஏ. ஆர். ரஹ்மான் உள்ளது எல்லோருக்கும் பெரிய ஆச்சயர்த்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சினிமாத்துறை மட்டுமில்லாமல், சென்னையில் மியூசிக் பள்ளி, ஷூட்டிங் நடத்தும் இடம் என பல தொழில்களிலும் அவர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News