கவுண்டமணியை ஒதுக்கிய மணிவண்ணன்.. இந்த ஒரு சீனால் சூப்பர் ஹிட் படத்தை இழந்த காமெடியன் 

டாப் ஹீரோக்களின் படங்களின் வெற்றிக்குப் பின்னால் காமெடியன்களின் பங்களிப்பும் கட்டாயம் இடம்பெறுகிறது. அந்த அளவிற்கு அவர்களின் நகைச்சுவை அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோலிவுட்டில் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் ஜாம்பவானாக திகழ்ந்தவர் தான் கவுண்டமணி. 

அந்த வகையில் இவர் காமெடியனாக நடித்து வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை படத்தில் நடிக்கும் வாய்ப்பை கவுண்டமணி நூலிலையில் தவறவிட்டார். அந்தப் படத்தில் வரும் மாஸ் வசனத்திற்கு மட்டும் நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்பது போல் மணிவண்ணன் இவரை ஓரங்கட்டி விட்டார்.

Also Read: கவுண்டமணி ஹீரோவாக நடித்த 5 திரைப்படங்கள்.. மார்க்கெட் இழந்ததால் ஜோடி போட்ட ஹீரோயின்

இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் குசும்புக்கே பெயர் போன சத்தியராஜ் மற்றும் மணிவண்ணன் காம்போவில் அந்த படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. இதில் மணிவண்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் கவுண்டமணி தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தான் இயக்கும் படத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என முடிவு செய்து அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் படத்தில் இவரும் சத்யராஜும் ஏகப்பட்ட வில்லத்தனமான வேலைகளை செய்வார்கள். ஒரு கட்டத்தில் மனம் திருந்திய இவர் சத்யராஜை பார்த்து ஒரு வரியில் அறிவுரை கூறுவார். அதில் இவர் நீ ஆடு உடம்பில் உன் ரத்தம் சுண்டும் வரைக்கும் நீ ஆடு என்று கூறும் மாஸ் வசனத்திற்கு திரையரங்குகளில் கைத்தட்டல்களும் விசிலும் பறந்தது. அந்த அளவிற்கு இந்த வசனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: அந்த நடிகையின் முன் அசிங்கப்படுத்திய ரஜினி.. ஈகோவால் இப்ப வர விரோதியாகவே இருக்கும் சத்யராஜ்

மேலும் மணிவண்ணன் சத்யராஜிற்கே டப் கொடுக்கும் விதத்தில் தனது நடிப்புத்திறனை இப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார். அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி வீரப்பதக்கம், வள்ளல் போன்ற படங்களின் மூலம் மீண்டும் இணைந்தது. இவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

நடிகராக தொடங்கி குணச்சித்திர கதாபாத்திரங்கள் வரை சத்யராஜ் இன்றளவும் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு அமைதிப்படை திரைப்படமும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். ஆனால் அந்தப் படத்தில் மணிவண்ணன் நடித்த கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருந்தால் அந்த அளவுக்கு படம் வெற்றி பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

manivannan-sathyaraj

Also Read: சத்யராஜுக்கு மகனாக 67 வயது ஹீரோ.. ஜீரணித்துக் கொள்ள முடியாத கேரக்டர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்