Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தம்பி ராமையாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய இயக்குனர்.. அவர் இல்லாமல் இவர் படம் வெளிவராது

உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் தம்பி ராமையா ஒரு இயக்குனர் என்பதே அவ்வளவாக யாருக்கும் தெரியாது

தற்போது காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வரும் தம்பி ராமையா முதன் முதலில் உதவி இயக்குனராகத்தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். நடிகர்கள் முரளி மற்றும் நாசரை வைத்து மனு நீதி என்னும் திரைப்படத்தை இயக்கி இயக்குனரானார். இந்த படம் அப்போது நல்ல வெற்றியையும் பெற்றது.

மனுநீதி திரைப்படத்திற்கு பிறகு தம்பி ராமையா நிறைய வருடங்களாக படங்கள் எதுவுமே இயக்கவில்லை. காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார். நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடியனாக இவர் நடித்திருக்கிறார். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இவர் ஒரு இயக்குனர் என்பதே அவ்வளவாக யாருக்கும் தெரியாது.

Also Read: அப்பா மகன் பிரண்ட்ஷிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. சமுத்திரகனி தம்பி ராமையா பிச்சு உதறிய ஹிட் படம்

வடிவேலுவுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த தம்பி ராமையா பல வருடங்களுக்குப் பிறகு அவரை ஹீரோவாக வைத்து இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. மேலும் அதன் பின்னர் வடிவேலுக்கும் இவருக்கும் ஆன உறவும் கசப்புடன் முடிந்தது. அதன் பின்னர் படமும் இயக்கவில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு என்பது தம்பி ராமையாவுக்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக தான் அமைந்தது என்று சொல்லலாம். ஒரு சாதாரண காமெடியனாக சினிமாவில் இருந்த தம்பி ராமையாவின் மற்றொரு பரிணாமத்தை மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா ரசிகர்கள் பார்த்தனர்.

Also Read: குணச்சித்திரம் காமெடி என இரண்டிலும் மின்னிய தம்பி ராமையாவின் 6 படங்கள்.. 50 வயதிலும் சாதித்த நடிகர்

தம்பி ராமையாவுக்கு இப்படி ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது இயக்குனர் பிரபு சாலமன் தான். இவருடைய மைனா திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இப்போது மிகப் பெரிய வெற்றியை பார்த்திருக்கிறார் தம்பி ராமையா. தற்போது பிரபு சாலமன் இவருக்கு ஆஸ்தான இயக்குனராகவும் ஆகிவிட்டார். இவர் இல்லாத பிரபு சாலமன் படங்களே இல்லை என்று சொல்லலாம்.

ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் இப்பொழுது குணச்சித்திரம், நகைச்சுவை, ஹீரோ ஹீரோயின் அப்பா கதாபாத்திரம் என அனைத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பிரபு சாலமனின் கும்கி, மைனா, செம்பி, தொடரி போன்ற அனைத்து படங்களிலும் தம்பி ராமையாவை பார்க்க முடியும்.

Also Read: உடல் அசைவிலேயே நகைச்சுவையை தூண்டும் 5 காமெடியன்கள்.. யாருக்குமே யாரும் சளைத்தவர் அல்ல

Continue Reading
To Top