தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் கமலஹாசன். இவருடைய நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் சலீமாக ஜெய்தீப் அஹ்லாவத் நடித்தவர். இவர் தற்போது ப்ளட் பிரதஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த க்ரைம் தொடரை ஷாத் அலி இயக்கியுள்ளார். இத்தொடர் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் இதற்கான பிரமோஷன் வேலைகளில் ஜெய்தீப் அஹ்லாவத் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜெய்தீப் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்காவில் கமலஹாசன் காரில் கைது செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை நியூயார்க் நகரில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் படப்பிடிப்பு நடைபெறும் போது கிறிஸ்துவ சமயம் காலம் என்பதால் வெகு கூட்டமாக பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இதனால் அமெரிக்க மக்கள் அனைவரும் கவனமாகவும், உஷாராக இருக்கும்படி அறிக்கைகள் விடப்பட்டது. அப்போது நாங்கள் பெரிய எஸ்யூவி மூன்று காரை எடுத்துக்கொண்டு பாலத்தில் செய்யும் காட்சிகளை எடுத்துக் கொண்டு இருந்தோம்.
ஆனால் படக்காட்சி சரியாக வராததால் மீண்டும் டோல்கேட் தாண்டி அந்த காட்சியை பாலத்தின் மேல் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த 3 காரில் கமல்ஹாசனும் ஒரு காரில் அமர்ந்து இருந்தார். ஆனால், திடீரென்று 10 அமெரிக்க போலீஸ் கார்கள் தங்களை சுற்றிக் கொண்டது. நாங்கள் கையில் துப்பாக்கி வைத்து இருந்தோம். அதனால் போலீஸ் தங்களை கீழே உட்காரும் படியும் துப்பாக்கி கீழே போடும்படி கூறினார்.
நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்களுக்கு புரிய வைத்தோம். ஆனால் கமல்ஹாசன் அவர்கள் கொஞ்சம் கூட பயப்படாமல் தைரியமாக இருந்தார். பின்பு அவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் அன்று கைது செய்யப்பட்டிருந்தால் கமல்ஹாசனுடன் நானும் கைது செய்யப்பட்டு இருப்பேன்.
சொல்லப்போனால் அன்று கைது செய்யப்பட்டு இருந்தால் நான் மிகவும் பிரபலமாகி இருப்பேன், பெரிதாக சாதித்தது போல் உணர்ந்து இருப்பேன் என கூறினார். அதாவது கமல்ஹாசனுடன் கைது செய்யப்பட்டிருந்தால் இது மிகப் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும் அதன்மூலம் நான் பிரபலமாக இருப்பேன் என்பதை கூறினார். அதுமட்டுமல்லாமல் என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத சம்பவம் இது என ஜெய்தீப் கூறினார்.