வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

புஷ்பா 2-க்கு பிறகு தமிழ் பட ரீமேக்கில் நடிக்க போகும் அல்லு அர்ஜுன்.. சர்ப்ரைஸ் தாங்காமல் வளைத்துப் போட்ட சம்பவம்

Actor Allu Arjun: தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன அல்லு அர்ஜுனுக்கு தமிழில் ஆதரவு மற்றும் ரசிகர்கள் கூட்டம் பெருகி வருகிறது. ‘அல வைகுந்தபுரம்லோ’ படத்திற்குப் பிறகு, இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் அவரை பான் இந்தியா நடிகர் அஸ்தஸ்துக்கு உயர்த்தி பிடித்தது.

அதுமட்டுமல்ல புஷ்பா படத்திற்கு பிறகு இவருடைய படங்களின் அப்டேட்டை தமிழ் ரசிகர்களும் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன் குறைந்த பட்ஜெட்டில் உருவான தமிழ் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்று, அதில் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.

Also Read: நம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்

தமிழில் சமீபத்தில் வெளியாகி சர்ப்ரைஸ் ஹிட் அடித்த படம் போர் தொழில். இந்த படம் திரையரங்கில் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான போர் தொழில் பாக்ஸ் ஆபிஸில் 20 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படத்தின் வசூல் விவரத்தை தெரிந்ததும் அல்லு அர்ஜுன் அப்படியே வளைத்து போட்டு விட்டார்.

இப்பொழுது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸ் எல்லாவற்றையும் அல்லு அர்ஜுன் வாங்கி விட்டார். அது போக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் கேரக்டரிலும் அவரையே நடிக்க வைக்க திட்டம் போடுகிறார். நடிகராக மட்டுமல்லாமல் ஆஹா என்ற ஓடிடி தளத்தை சொந்தமாக வைத்திருக்கும் அல்லு அர்ஜுன், அதன் மூலம் நிறைய தரமான படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

Also Read: பொன்னியின் செல்வனுக்கு டப் கொடுத்த புஷ்பா 2.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு வியாபாரமா!

இந்நிலையில் தமிழில் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் போர் தொழில் படத்தின் உரிமையை பெற்றிருக்கும் அல்லு அர்ஜுன், விரைவில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து சூப்பர் ஹிட் கொடுக்க காத்திருக்கிறார்.

போர் தொழில் படத்தில் காவல் அதிகாரியான மிரட்டலான கெட்டப்பில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த கேரக்டரில் அப்படியே தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதேபோல் இந்த படத்தின் ஸ்ட்ராங் கேரக்டரான சரத்குமாரை தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க வைத்து, அடுத்த வெற்றி படத்தை கொடுக்க அல்லு அர்ஜுன் ஆயத்தமாகிவிட்டார்.

Also Read: ஆடையை குறைத்துக் கொண்டால் டபுள் மடங்கு சம்பளம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய விவாகரத்து நடிகை

- Advertisement -

Trending News