ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பொன்னியின் செல்வனுக்கு டப் கொடுத்த புஷ்பா 2.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு வியாபாரமா!

கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த திரைப்படம் புஷ்பா. இந்திய சினிமாவில் பான் இந்தியா மூவி பிரபலமாகி கொண்டிருக்கும் நேரத்தில் ரிலீஸ் ஆகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். இதற்கு அல்லு அர்ஜுனனின் சிறந்த நடிப்பு ஒரு காரணம்.

செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியது மிகப்பெரிய வைரலானதோடு, நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகின. அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

Also Read:புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

புடவை, கழுத்தில் எலுமிச்சை மாலை என ஆணும் பெண்ணும் கலந்தது போல் ஒரு கெட்டப்பில் வெளியான அல்லு அர்ஜுனின் புகைப்படம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகம் ஆக்கியது. தற்போதைய தகவலின் படி புஷ்பா 2 படக்குழு இந்த படத்தை 250 நாட்களில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதில் 35 நாட்கள் சண்டைக்காட்சி ஒன்று மட்டுமே படமாக்கப்பட இருக்கிறதாம்.

புஷ்பா 2 படத்தின் பிசினஸை ஆயிரம் கோடி வரை கொண்டு செல்லவும் இந்த படக்குழு திட்டம் தீட்டி வருகிறதாம். படத்தின் இசை உரிமம் மட்டுமே 45 கோடிக்கு டி சீரிஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆகி கோடிகளை அள்ளிய பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமை விற்ற தொகையை விட இது அதிகம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read:டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2-வுக்கு இத்தனை கோடியா!

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் சாதாரண செம்மரம் கடத்துபவனாக இருக்கும் ஒருவன் எப்படி அதிகாரத்துக்கு வருகிறான் என்பதை கதையாக எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாம் பாகத்தில் அதிகாரத்திற்கு வந்த அவன் தன்னுடைய பவரை எந்த அளவுக்கு விரிவு படுத்துகிறான் என்பதை மையமாகக் கொண்டு திரைக்களத்தை அமைத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி கொண்டு இருக்கிறது. தற்போது படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:கவலையில் இருக்கும் ராஷ்மிகா.. புஷ்பா 2 புஸ்ஸுன்னு போச்சு

- Advertisement -

Trending News