திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஜெயிலர் வசூலை மிஞ்சும் சூர்யாவின் அடுத்த பட பட்ஜெட்.. 1000 கோடிக்கு மேல் டார்கெட், சரித்திர நாயகனாக மாறும் ரோலக்ஸ்

Jailer-Suriya: சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இதை அடுத்து சூர்யாவின் லயன் அப்பில் நிறைய படங்கள் இருக்கிறது. வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இதை எடுத்து சூரரைப் போற்று கூட்டணியுடன் மீண்டும் ஒரு படம் சூர்யா பண்ண போகிறார்.

இந்த சூழலில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஐந்து நிமிடம் சூர்யா நடித்திருப்பார். மேலும் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டு இருக்கிறார். இவ்வாறு சூர்யாவுக்கு வரிசை கட்டி படங்கள் இருந்தாலும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.

Also Read : நிஜ புலியுடன் சண்டை போட்ட முதல் நடிகர்.. சூர்யாவுக்கு கங்குவா காட்டிய உயிர் பயம்

அதாவது இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ஜெயிலர் படம் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 650 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. ஆகையால் இந்த வசூலை முறியடித்து ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்ட கூட்டணி அமைந்துள்ளது.

பாலிவுட்டில் பிரபல இயக்குனர் ஓம்பிரகாஷ் மொஹ்ராவ் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். அதுவும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் அதாவது கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும் மகாபாரத கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்ட இருக்கிறது.

Also Read : பட வாய்ப்புக்காக விக்ரமை ஏமாற்றிய சூர்யா.. டீசர் வெளியானதற்கு பின்னால் நடந்த ஏமாற்று வேலை

குறிப்பாக இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடிக்க இருக்கிறார். மகாபாரத கதையை பொருத்தவரையில் கர்ணன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும். ஆகையால் சூர்யா பக்காவாக பொருந்துவார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ரவிவர்மா செய்ய இருக்கிறார். ஏற்கனவே இவர் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா சுதா கொங்கரா மற்றும் வாடிவாசல் படங்களை முடித்த பிறகு தான் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். அதாவது 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்ணா படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. இந்த செய்தி இப்போது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

Also Read : இதெல்லாம் சாகக்கூடிய வயசா.? நொந்து போய் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறிய சூர்யாவின் புகைப்படம்

- Advertisement -

Trending News