Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆல் டைம் பான் இந்தியா ஸ்டார் கமல் சார் தான்.. ரஜினி ரசிகர்களை சீண்டி பார்த்த நடிகர்

ஜெயிலர் படத்திலும் தான் பல மொழி பிரபலங்கள் ஆன மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றவர்கள் நடிக்கிறார்கள்.

kamal-rajini cinemapettai

தன்னுள் இருக்கும் முயற்சிகளை தமிழ் சினிமாவில் இன்று வரை விடாது வெளிகாட்டி வரும் இரு ஜாம்பவான்கள் தான் கமல் மற்றும் ரஜினி. இந்நிலையில் ஆல் டைம் பான் இந்தியா ஸ்டார் கமல் மட்டும்தான் என கூறி ரஜினி ரசிகர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் ஒருவர்.

பல படங்களில் நடித்தும் தனக்கென்று ஒரு அடையாளத்தை இன்று வரை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருபவர் தான் சித்தார்த். இந்நிலையில் ஜூன் 9 இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ரொமான்டிக் ஆக்சன் நிறைந்த படம் தான் டக்கர். அதன்பின் சித்தா என்னும் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்க உள்ளார்.

Also Read: உங்களுடன் எத்தனை படம் பண்ணவும் ரெடி, அந்த இயக்குனர் மட்டும் வேண்டாம்.. தயாரிப்பாளருக்கு செக் வைத்த சிம்பு

மேலும் இவர் மாதவன், நடிகை நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் உடன் இணைந்து டெஸ்ட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான தயாரிப்பில் பெருதளவு எதிர்பார்ப்புடன் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் கமலின் இந்தியன் 2 வில் இவரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.

அவ்வாறு இருக்கையில் தற்பொழுது சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வர கமல் மட்டும்தான் காரணம். மேலும் அவர்களின் நடிப்பிற்கு முன் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை எனவும் கூறினார்.

Also Read: சிறுத்தை ராக்கெட் ராஜாவாக மாறிய கார்த்தி.. உண்மை சம்பவம், ஜப்பான் படத்தின் கதை இதுதான்

அதிலும் குறிப்பாக இந்தியாவின் முதல் தலை சிறந்த லெஜெண்ட் யார் என்று என்னிடம் கேட்டால் கமல் என்று தான் கூறுவேன் என இவர் கூறிய வார்த்தைகள் ரஜினி ரசிகர்களை சற்று வேதனைப்படுத்தி வருகிறது. அவ்வாறு பார்க்கையில் ஜெயிலர் படத்திலும் தான் பல மொழி பிரபலங்கள் ஆன மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றவர்கள் நடிக்கிறார்கள்.

இவர் ஏன் குறிப்பாக கமலை பான் இந்தியா ஸ்டார் என கூறுகிறார் என்ற கேள்வியை முன் வைக்கிறது. பான் இந்தியா ஸ்டார் என்பது ஒரு இடத்தில் நடித்திருந்தாலும் அவை எங்கு சென்றாலும் அத்தகைய நடிப்பின் மூலம் பெரிதும் பேசப்பட்டு வருவார்கள். அவ்வாறு தான் கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் படத்தில் நான்கு மொழியிலும் அந்தந்த ஊர் காரர்கள் போலவே ஒரே டேக்கில் பேசி கமல் அசத்தி இருப்பார். மேலும் இவரின் இத்தகைய விளக்கம் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் குடைச்சல் கொடுத்து வருகிறது.

Also Read: மாப்பிள்ளை கெட்டபில் ஷூட்டிங் வந்த கார்த்திக்.. இயக்குனர் கொடுத்த பல்பால் காண்டான நவரச நாயகன்

Continue Reading
To Top