அஜித், விஜய்க்கு நிகராக சண்டை போடும் அடுத்த கட்ட நடிகர்கள்.. என்னதான் சண்ட போட்டாலும் உச்சத்தை தொட முடியாது

சினிமாவுல நடிகர்களுக்காக அவங்க ரசிகர்கள் சண்டை போடுறது காலங்காலமா தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதுல விஜய் அஜித்தோட ரசிகர்கள் சண்டை 25 வருஷத்துக்கு மேல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த நடிகர்களே வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் கேட்கிற மாதிரி இல்லை.

விஜய் அரசியலுக்கு போறதுனால சினிமா விட்டு விலகப் போகிறேன் என்று அறிவிப்பும் கொடுத்துவிட்டார். அதேபோல அஜித் சொல்ல வேண்டாம் அவர் எப்போதும் போல சினிமாவுக்கு எனக்கு சம்பந்தமே இல்ல அப்படிங்கிற ஒரு ரூட்டில் அவர் போய்கிட்டு இருக்காரு. அதனால் இந்த சண்டை இருக்காதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.

இப்ப சம்பந்தமே இல்லாம திடீரென்று சூர்யா நடித்த கங்குவா படத்தின் டீசர் வெளிவந்தது. அது ஏற்கனவே VFX சரி இல்லை என்று சொன்னதால் இந்த டீசர் எப்படி இருக்குன்னு பார்த்தாங்க.

இன்னொரு தரப்பு அதெல்லாம் இல்ல விக்ரம் நடித்து தங்கலான் டீசர் வெளிவந்து நல்ல பேர சம்பாதிச்சு அதை காலி பண்ண சூர்யா இப்படி செஞ்சுட்டு வராரு.

இந்த டீசரை பொறுத்துக் கொள்ள முடியாமல் விக்ரம் ரசிகர்கள் தங்கலான் படத்தோட டீசரை மீண்டும் ரிலீஸ் செய்து நடிச்சா எப்படி நடிங்கடா எதுக்குடா உங்களுக்கு இந்த வேலை நாங்கதான் எப்போதுமே நம்பர் ஒன் என கெத்து காட்டி வருகின்றனர்.

இது என்னடா கொடுமையா இருக்கு சம்பந்தமே இல்லாம சத்தம் இல்லாம இருந்த ரெண்டு நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போட ஆரம்பிச்சிருக்காங்க.

அடுத்த மாஸ் ஹீரோ நாங்க தான் என்று நினைக்கும் ஹீரோக்கள்

ஒருவேளை விஜய், அஜித் இல்ல இனிமே அடுத்த பெரிய ஹீரோ, மாஸ் ஹீரோன்னா சூர்யா, விக்ரம் தான் என்று இவங்களே நினைச்சுக்கிட்டு இப்படி பேசிட்டு வராங்களா என ஒரு பக்கம் சொல்லிட்டு வராங்க. எப்போதுமே சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் சண்டை இருந்து வருவது உண்மைதான்.

அது எப்போது வெளியில் தெரியாது இப்ப இந்த பெரிய ஹீரோ ரெண்டு பேரு இல்லாததுனால வெளியே தெரிய வருகிறது. என்னதான் சண்டை நீங்க போட்டுக்கிட்டாலும் மாஸ் ஹீரோன்னா அது விஜய், அஜித் மட்டும் தான் இவங்கள தாண்டி இனிமேல் யாரும் வர முடியாது இவங்க தான் கடைசியாக இருப்பார்கள் என இவர்களது ரசிகர்கள் வலைதளத்தில் கெத்து காட்டி பேசி வருகின்றனர்.

விஜய் இடத்தைப் பிடிக்க அடுத்த சிவகார்த்திகேயன், சூர்யா அதே போல அஜித் இடத்தைப் பிடிக்க விக்ரம் போன்ற நடிகர்கள் போட்டி போடுவது நன்றாக தெரிகிறது அதை மையப்படுத்தி ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

ரசிகர்கள் இப்படி சண்டை போடுவதற்கு வேறு யாரும் காரணம் இல்லை நடிகர்கள் தான் நல்லா புரியுது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்