கமலை மிஞ்சிய அஜித்தின் சம்பளம்.. ரகசியமாய் நடத்தபட்ட ஏகே படத்தின் பூஜை

Ajith and Adhik combination AK 63 movie pooja happened in pongal: தனது ஒவ்வொரு அடியையும் நிதானத்துடன் எடுத்து வைக்கும் அஜித் அவர்கள் தன் அடுத்த படத்திற்கான கதையையும் இயக்குனரையும் கவனமாக தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட் களில் கமிட் ஆகி வருகிறார்.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் துணிவு வாரிசுடன் களமிறங்கி கல்லாகட்டியது. அதற்குப்பின் மகழ்திருமேனியுடன் ஏகே 62 விற்கு கரம் கோர்த்த அஜித் அவர்களின் விடாமுயற்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கிய நிலையில் பல தாமதங்களுக்கு பின் பொறுமையாக ஆரம்பிக்கப்பட்ட விடாமுயற்சி ஓராண்டு கடந்த பின்னும்  இன்னும் முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

எப்படியும் பிப்ரவரியில் விடாமுயற்சி சூட்டிங் நிறைவு செய்து தனது அடுத்த படமான ஏகே 63க்கு ஆயுத்தம் ஆகி வருகிறார் அஜித். ஏகே 63 காக பிரபுவின் மருமகன் மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரனை பிக்ஸ் பண்ணி இருந்தார்.

போடா போடியில் அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் சில சறுக்கல்களுக்கு பின் கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனியின் மூலம் மாஸ் காட்டி இருந்தார்.  இதன் தொடர்ச்சியாக ஏகே 63  இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது.

Also read: நமத்து போன படம்னு பாதியிலேயே நிறுத்திய கமலின் 5 படங்கள்.. அஜித்தின் இயக்குனருக்கு போட்ட கோவிந்தா

ஏகே63 யில் அஜித் மற்றும் ஆதிக்க ரவிச்சந்திரனின் கூட்டணி கன்ஃபார்ம் ஆனதை அடுத்து  இந்த ப்ராஜெட்டை தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதற்கென இந்நிறுவனம் சென்னையில் பிரம்மாண்டமான அலுவலகம் ஒன்றை அமைத்திருப்பதாகவும் படத்திற்கான வேலைகள் அங்கு வைத்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்.

தமிழர் திருநாளான பொங்கலன்று ஏகே 63 படத்திற்கான பூஜை மிகவும் எளிமையாகவும் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அவர்களுடைய டீம் என முக்கிய புள்ளிகள் மட்டுமே அழைக்கப்பட்டு நடத்தப்பட்டு உள்ளது. ப்ரீ ப்ரோடக்க்ஷன் ஒர்க் எல்லாம் பக்காவாக பிளான் பண்ணி முடித்திருக்கிறார் ஆதிக்  ரவிச்சந்திரன்.

மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்திற்காக அஜித் அவர்கள் தனது உடல் எடையை குறைத்து உள்ளதாக தகவல். மேலும் இப்படத்திற்காக அஜித்திற்கு 163 கோடி சம்பளம் என கூறப்படுகிறது. கல்கி 2898 AD படத்தில் இரண்டு பாகங்களில் வில்லனாக நடிக்கும் கமலுக்கே 150 கோடி சம்பளம் இருக்க அதைவிட அதிகமான அஜித்தின் சம்பளம் வாயை பிளக்க வைக்கிறது.

Also read: அஜித்துடன் ஜோடி போட்டு காணாமல் போன 5 நடிகைகள்.. சின்னத்திரையில் கலக்கும் அந்த 6 அடி ஹீரோயின்

- Advertisement -spot_img

Trending News