நமத்து போன படம்னு பாதியிலேயே நிறுத்திய கமலின் 5 படங்கள்.. அஜித்தின் இயக்குனருக்கு போட்ட கோவிந்தா

Kamal in Droped Movies: சினிமா திரையுலகில் கமல்ஹாசனின் பங்களிப்பு கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக 230 படங்களுக்கும் மேல் நடித்து கற்றுத் தெரிந்த ஞானியாக வலம் வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய சில படங்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு சாதனை படமாக வரலாறு படைத்திருக்கிறது. ஆனாலும் சில படங்கள் துவக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தும் அளவிற்கு நமத்து போய் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மருதநாயகம்: 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படத்தை துவங்குவதற்கான அதிகாரப்பூர்வமான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக வேலங்குடியில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. மேலும் இதில் கமலஹாசன் நண்பர் ஒருவரின் கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு வாக்குவாதம் ஆனது. அதனால் இப்படத்தை கமலுடன் இணைந்து தயாரிக்க திட்டமிருந்த ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் பின்வாங்கியது. அடுத்து இப்படத்தின் பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு இப்படத்தை புதுப்பிக்கும் விஷயமாக கமல் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ஆனாலும் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

சபாஷ் நாயுடு: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரம் தான் சபாஷ் நாயுடு. அதனால் இந்த கதாபாத்திரத்தை வைத்து தனியாக நகைச்சுவையான ஒரு படத்தை எடுக்கலாம் என்று முயன்றார். அதற்கு ஏற்ற மாதிரி தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் கமலுக்கு காலில் அடிபட்டு விட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு மற்ற படங்களில் கமல் பிஸியாகி விட்டதால் இந்த படத்தை அப்படியே கிடப்பில் விட்டு விட்டார்.

Also read: கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

கபர்தார்:  1984 ஆம் ஆண்டு இயக்குனர் டி இராமராவ் இயக்கத்தில் இப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தின் கதை ஆனது ஒரு தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளியின் நிலைமை மற்றும் அவரைக் காப்பாற்ற போராடும் மருத்துவரை மையமாக வைத்து சமூக விழிப்புணர்வு படமாக எடுக்க முயற்சி செய்யப்பட்டது. அத்துடன் படத்தின் முக்கால்வாசி படபிடிப்பை முடித்த பிறகு தயாரிப்பாளருக்கு பெரிய திருப்தி அளிக்காததால் அப்படியே வியாபாரம் ஆகாமல் போய்விட்டது.

மார்க்கண்டேயன்: 1990 ஆம் ஆண்டு கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் கமலை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி இயக்குனர் சரியாக அமையாமல் பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டது. அதன் பின் ஏ எம் நந்தகுமாரின் இயக்கத்தில் ஒரு கதை சரியாக அமைந்த நிலையில் குஞ்சுமோன் வேற ஒரு பிரச்சனையில் மாட்டியதால் இந்த படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் ஃபேவரிட் இயக்குனரான எச் வினோத் படமும் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. இவருடன் இணைந்து கமல் நடிப்பதாக அனைத்து விஷயங்களும் பரவிய நிலையில், கமல் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் பிஸியாக நடித்து வருவதால் எச் வினோத்துக்கு சரியான பதிலை சொல்லாமல் அவரை உதாசீனப்படுத்தி விட்டார். அந்த வகையில் இப்போதைக்கு இந்த படமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

Also read: கமல்ஹாசனின் கலக்கல் காமெடியில் உருவான 5 சூப்பர் ஹிட் படங்கள்.. வயிறு குறுங்க சிரிக்க வைத்த அவ்வை சண்முகி

- Advertisement -spot_img

Trending News