Aircel: ஏழைகளின் செல் ஏர்செல் என்று சொல்லும் அளவுக்கு தொலைத்தொடர்பில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் தமிழகத்தைச் சேர்ந்த சிவசங்கரன். ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற நெட்வொர்க் தமிழகத்தில் வருவதற்கு முன்பே ஏர் செல் தனி முத்திரை பதித்திருந்தது.
தொலைத் தொடர்பு பற்றிய புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம் இன்று திவால் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 14,000 கோடிகளை இழந்த சிவசங்கரன் ஒருபோதும் அதற்காக வருத்தப்படவில்லை.
எல்லாமே அனுபவம் தான். எனக்கு பணம் முக்கியம் இல்லை என வெளிப்படையாக கூறுகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய வீழ்ச்சி குறித்து பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, எல்லோரும் என்னை 14 ஆயிரம் கோடி இழந்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அது முக்கியம் கிடையாது. நான் யாருக்கும் முன்மாதிரியான உதாரணம் கிடையாது. நான் ஒரு முட்டாள்.
சிவசங்கரனின் வீழ்ச்சி
தொழிலில் கவனம் ரொம்பவும் முக்கியம். நான் அதை செய்யவில்லை. எனக்கு பிரஷர் வந்த போது கம்பெனியின் பங்குகள் அனைத்தையும் விற்றேன். அதனால் ஒருபோதும் நான் துன்பப்படவில்லை.
அர்ஜென்டினாவில் ஆலிவ் கார்டன், ஆஸ்திரேலியாவில் தோட்டம், பாமாயில் எண்ணெய் செய்வதற்காக பனைமர தோட்டம் போன்ற எல்லாவற்றையும் வாங்கினேன். இது எல்லாமே அனுபவத்திற்காக தான்.
அதேபோல் நான் பொருட்களை விற்பதில்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதை உருவாக்கினேன். அந்த பொருளில் தரம் இருந்தால். நாம் விற்க வேண்டாம். மக்களே வந்து வாங்குவார்கள் என தன்னுடைய பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவருடைய இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இப்போது கூட ஏர்செல் நிறுவனம் மீண்டும் தொடங்கப்பட்டால் நாங்கள் வாடிக்கையாளராவோம் என்ற கருத்துகளும் வந்து கொண்டிருக்கிறது.
அந்த அளவுக்கு சிவசங்கரன் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். ஆனாலும் சில அழுத்தங்களின் காரணமாக இவர் நிறுவனம் திவாலாக மாறியது குறிப்பிடத்தக்கது.