25% உயர்ந்த ஜியோ செல் போன் கட்டணம்.. கல்யாணத்துக்கு கூப்பிடாமலேயே மொய் வாங்கிட்டீங்களே அம்பானி

Ambani-Jio: டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் அம்பானி தன்னுடைய இளைய மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்த இருக்கிறார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இவர்களின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பலரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு நடந்தது.

அதை அடுத்து சமீபத்தில் கூட கப்பலில் இரண்டாவது முறையாக ப்ரீ வெட்டிங் நிகழ்வை இவர் நடத்தினார். இதற்காக கிட்டத்தட்ட 1250 கோடிகளை அவர் செலவழித்து இருந்தார். அதை தொடர்ந்து ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் அடுத்த மாதம் 12ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இந்நிலையில் அம்பானியின் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் மாதாந்திர செல்போன் கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அதன்படி இதன் மாதாந்திர கட்டணம் 155 ஆக இருந்தது. ஆனால் இப்போது அதை 189 ஆக உயர்த்தி இருக்கின்றனர்.

இது வரும் ஜூலை 3 முதல் அமலுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 12 முதல் 25% வரை இந்த கட்டணம் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அம்பானியின் பிசினஸ் மூளை

அது மட்டுமின்றி ஜியோவின் இந்த அதிரடியை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் தங்களுடைய கட்டணத்தை கணிசமாக உயர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுதான் இப்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் மகன் கல்யாணத்திற்காக கோடிகளை வாரி இறைத்த அம்பானி இப்படி பொதுமக்கள் தலையில் கை வைத்து விட்டாரே. உங்க வீட்டு கல்யாணத்துக்கு நாங்க மொய் வைக்கணுமா என்ற புலம்பல்கள் இப்போது எழுந்துள்ளது.

உண்மையில் ஆடம்பரமாக கல்யாணத்தை நடத்தும் அம்பானி அதற்கான செலவை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க பிளான்ட்ஸ் போட்டு விட்டார். இதுதான் பிசினஸ் மூளையா? நல்லா இருக்கு உங்க நியாயம் என நெட்டிசன்கள் அம்பானியை ரோஸ்ட் செய்து வருகின்றனர். ஆக மொத்தம் ஜியோ வாடிக்கையாளர்கள் இனி மாதாமாதம் அம்பானிக்கு மொய் வைக்க வேண்டும்.

அதிரடியாக கட்டணத்தை உயர்த்திய ஜியோ

Next Story

- Advertisement -