மானியத்தில் ஏற்படும் குளறுபடிகள்.. கேஸ் சிலிண்டர் முறைகேடு தடுக்க புதிய திட்டம்

Cylinder: ஒரு சிலிண்டர் விலை 818.50 ஆக இருக்கிறது. இதனுடைய விலை எப்பொழுது கூடும் குறையும் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு வருடம் குறைவாகவும் அடுத்த வருடம் அதிகமாகவும் மாறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வரை 818.50 ரூபாய் தான் இருக்கிறது. தற்போது வந்த தகவலின் படி வீடுகளில் பயன்படுத்தப்படக்கூடிய சிலிண்டரை வாங்குவதில் புதிய மாற்றம் ஏற்படப்போகிறது.

எரிவாயு சிலிண்டர்கள் ஜிசிஆர் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் சார்பாக அறிக்கை வெளி வந்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் நடத்திய மீட்டிங் ஒன்றில் இந்த அறிவிப்பை பற்றி சொல்லி அமுலாக்க போகிறார்.

சிலிண்டர் வாங்குவதில் வரப்போகும் மாற்றம்

அதாவது சிலிண்டர்களில் இனி QR கோடு இருக்கும். இந்த கோடை இனி ஸ்கேன் செய்தால் மட்டும் தான் சிலிண்டர்களை வாங்க முடியும். இது எதற்காக என்றால் சிலிண்டர் திருட்டை தடுக்க மற்றும் வீட்டு சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதனால் வீடுகளில் இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாறப்போகிறது என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக எல்பிஜி சிலிண்டர்கள் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் நுகர்வோரின் வீட்டு வாசலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 70%-80% டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நேரடியாக வீடுகளில் வந்து சிலிண்டர் வழங்கும் போது நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் படி சோதனை செய்யப்படுகிறது.

அத்துடன் சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் பொழுது டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்களை மேற் பார்வையிடுவார்கள். இது எதற்காக என்றால் மானியத்துடன் கூடிய எல்பிஜியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்த விஷயம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் இதில் ஒரு குளறுபடி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. என்னவென்றால் ஆதார் சரி பார்ப்பதற்காக கைரேகை பதியாவிட்டாலும் சிலிண்டர் கிடைக்கும். ஆனால் கைரேகை கொடுக்க இணைப்பு எடுத்த ஆட்கள் வீட்டில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மானியம் கிடைக்கும் இல்லாவிட்டால் வேறு யாராவது சிலிண்டர்கள் வாங்கி இருந்தால் அதற்கான மானியம் துண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் வணிகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

Next Story

- Advertisement -