சுஷாந்த் சிங் மரணத்திற்குப்பின் அந்த வார்த்தையை கேட்டாலே பதறும் வாரிசு.. அஜித் தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலைமையா?

பாலிவுட்டில் சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் டாப் நடிகர்களின் படங்களை பாய்காட் செய்து விடுகிறார்கள். ஆகையால் படத்திற்கு மோசமான விமர்சனம் கிடைத்து படு தோல்வியை சந்திக்கிறது.

இதற்கு காரணம் பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு ஆதிக்கம் அதிகம். வாரிசு பிரபலங்களுக்கு மட்டும் தான் அங்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று பெருமளவில் பேசப்பட்ட வருகிறது. ஒரு சாதாரண இளைஞன் திறமையால் முன்னுக்கு வந்தாலும் அவருக்கு குடைச்சல் கொடுப்பார்கள்.

Also Read : பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவில் குடும்பம் குட்டியுமா செட்டிலான 3 நடிகைகள்.. இதுல குஷ்புவுக்கு கோயில் வேறயா.!

அவ்வாறு சுஷாந்த் சிங் மரணத்திற்கும் நிப்போட்டிசம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்பி தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரும் வாரிசு நடிகை என்பதால் இவரது படங்களும் படு தோல்வியை சந்தித்து வருகிறது.

பாலிவுட்டில் தர்மா புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ஜோக்கர் வாரிசு நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் தான் ஜான்வி கபூரையும் பாலிவுட்டில் அறிமுகம் செய்தார். ஆகையால் பலரும் ஜான்விகபூரை வாரிசு நடிகை என கேலி செய்து வருகிறார்கள்.

Also Read : கவர்ச்சியில் அம்மாவை ஓரம் கட்டும் ஜான்வி கபூர்.. நீச்சல் உடையில் பார்த்து குளிர்காயும் ரசிகர்கள்

இதனால் என்னை வாரிசு நடிகை என்ற விமர்சனம் செய்வதால் நான் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக ஜான்வி கபூர் கூறி உள்ளார். மேலும் இதனால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும் ஒரு பேட்டியில் மனம் திறந்து ஜான்வி கபூர் பேசியுள்ளார்.

ஒருவகையில் வாரிசு பிரபலங்களுக்கு திறமை இருந்தும் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்படவில்லை. அதே நிலைமை தான் தற்போது ஜான்வி கபூருக்கும் ஏற்பட்டுள்ளது. அஜித் படத்தின் தயாரிப்பாளர் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என பலரும் வருத்தத்துடன் கூறி வருகிறார்கள்.

Also Read : மூன்று மொழிகளிலும் ராணிகளாக பார்க்கப்பட்ட 5 நடிகைகள்.. ஸ்ரீதேவியே ஆச்சரியப்பட வைத்த பிரபல நடிகை