ஒட்டுமொத்த கதையும் ஓவர் டேக் செய்த குணசேகரனின் மகா நடிப்பு.. தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நாளும் குணசேகரனின் நடிப்புக்கு அனைவரும் அடிமையாகிக் கொண்டே வருகிறோம். அய்யய்யோ என்ன நடிப்பு இவ்வளவு நாள் எங்க சாமி இருந்தீங்க மகா பிரபுவே என்று சொல்வதற்கு ஏற்ப, நவ ரசத்தையும் முகத்தில் காட்டி ஒட்டுமொத்த கதையையும், ஓவர் டேக் செய்து நடிப்பை பின்னி பெடல் எடுத்துக் கொண்டு வருகிறார்.

ஏற்கனவே ஜீவானந்தம் கொடுத்த குடைச்சலால் ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமல் பயத்துடன் தவித்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி ஆடிட்டர் மறுபடியும் பிரேக்கிங் நியூஸ் ஆக ஒரு குண்டத்தூக்கி போட்டு விடுகிறார். அதாவது குணசேகரன் பார்த்து பார்த்து ஆசைப்பட்டு கட்டிய இந்த வீட்டிலும் ஜீவானந்தத்துக்கு பங்கு இருப்பதாக வந்து கூறி விடுகிறார்.

Also read: எதிர்நீச்சல் ஜீவானந்தம் செய்த மிகப்பெரிய மாற்றம்.. எந்த சீரியலிலும் செய்யாத புரட்சிகரமான செயல்

இதைக் கேட்டு பொங்கி எழுந்த குணசேகரன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விடுகிறார். இதை பார்த்த எல்லோரும் பரிதவித்து பதட்டம் அடைகிறார்கள். ஆனால் இவருடைய மனைவி ஈஸ்வரி ஏதோ மூணாவது மனுஷனுக்கு நெஞ்சுவலி வந்தது போல் தம்பி ஆஸ்பத்திரி கூட்டுப் போங்க, கூட்டு போங்க என்று சொல்கிறார்.

இதற்கு ரேணுகா, நந்தினி பெர்பார்மன்ஸ் எவ்வளவோ பரவாயில்லையே என்பது போல் இருந்தது. அடுத்த கதிர் குண்டு கட்டாக குணசேகரனை தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார். ஆனால் அந்த நேரத்தில் கார் எதுவும் இல்லாததால் அனைவரும் பதட்டம் அடைகிறார்கள். ஏற்கனவே அங்கே படித்த பெண்கள் புத்தி இல்லாமல் தான் அலைகிறார்கள்.

Also read: வில்லத்தனத்தையும் தாண்டி அழுது சிரிக்க வைத்த குணசேகரன்.. கொஞ்சம் கூட அசராமல் அடிக்கும் ஜீவானந்தம்

அதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக யாருமே ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணாமல் பைக்கில் கூட்டிட்டு போகலாம் என்று முடிவு பண்ணுகிறார்கள். அது எப்படி நெஞ்சுவலியால் துடித்த ஒருவரை பைக்கில் உட்கார வைத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. சரி இது கூட ஒரு அவசரத்தில் எடுத்த முடிவாக கூட இருக்கலாம்.

ஆனால் அவரை உட்கார வைத்துக் கொண்டு போவதை பார்க்கும் பொழுது நண்பன் படத்தில் விஜய் மற்றும் இலியானா, ஜீவாவின் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துட்டு போவது போல் இருந்தது. பிறகு ஒரு வழியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் இதெல்லாம் குணசேகரனின் திட்டப்படி நாடகமாகத்தான் இருக்கப் போகிறது. இதை பார்த்த அந்த வீட்டில் உள்ள பெண்கள் ஜீவானந்திடம் போட்டிக்கு நின்னு சொத்தை காப்பாற்றிக்கொள்ள குணசேகரன் போட்ட அஸ்திவாரம்.

Also read: ஜீவானந்தத்தின் வீக்னஸ் பாயிண்ட்டை குறி வைக்கும் குணசேகரன்.. தலைவன் கதறி அழும்போது குமுறி சிரித்த மருமகள்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்