நடு ரோட்டில் உட்கார்ந்து அழுது புரண்ட விஷால்.. தன்கையே தனக்குதவின்னு லண்டன் புறப்பட்ட சங்கத் தலைவர்

Actor Vishal went london to start thupparivalan 2 shoot: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் ஆக உள்ள விஷால் அவர்களுக்கு கடந்த ஆண்டு வெளிவந்த ஆதிக் ரவிச்சந்திரனின் மார்க் ஆண்டனி நல்ல திருப்பத்தை கொடுத்தது.  அதற்குப்பின் சொல்லிக் கொள்ளும் அளவு படங்கள் ஏதும் கைவசம் இல்லாமல் இருந்து வருகிறார் விஷால்.

செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால், நடிகர் அர்ஜுனிடம் வேதம் ஏழுமலை போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.  சண்டக்கோழி மருது போன்ற படங்கள் இவருக்கு ஏறுமுகமாக அமைந்தது.

இடையிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆர் கே நகர் இடைத்தேர்தலை சந்தித்த விஷால் அவர்கள் வேட்ப மனுவை சரியாக தாக்கல் செய்யாமல் பல்பு வாங்கிய கதையும் உண்டு. விஷாலுக்கு அடி மேல் அடியாக படங்களும்  சரியாக ஓடாமல் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்கி நொந்து போனார்.

Also read: கமல், ஷங்கர் கூட்டணியை அவமானப்படுத்தும் விஷால்.. லைக்கா மீது தொடர்ந்த வழக்கு

பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் இவராகவே தேடி போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்வது இவரது வழக்கமாக இருக்கிறது. இவர் நடித்து வெற்றி பெற்ற துப்பறிவாளன் படம் இரண்டாம் பாகத்தை இயக்க இருந்த நிலையில் மிஷ்கினுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட  துப்பறிவாளன் 2  பேச்சுவார்த்தையுடன் தடைப்பட்டது.

அடுத்ததாக ஹரியுடன் ரத்தினம் படத்தில் இணைந்துள்ள விஷால் தற்போது அவரது எக்ஸ் தளத்தின் முகப்பு பக்கத்தில் துப்பறிவாளன் புகைப்படத்தை வைத்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  துப்பறிவாளன் 2 கைவிடப்படவில்லை எனவும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் லண்டன் சென்று அதற்கான பணிகளை செய்து வருவதாகவும் விஷால் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்ற பின்னணியை கருவாகக் கொண்டு உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற துப்பறிவாளன் படத்தின் இயக்குனர் மிஷ்கின் தனது கருத்து வேறுபாட்டை, மோதலை மறந்து இறங்கி வந்தாலும் முடியவே முடியாது என்று விஷால் மறுத்து துப்பறிவாளன்  2 படத்தை தானே இயக்குவதாகவும் வெறி கொண்ட வேங்கையென களத்தில் இறங்கி உள்ளார் விஷால்.

Also read: விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி.. இவர் என்ன சொன்னாலும் சிரிப்பு தான் வருது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்