சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் 5 பெரிய பட்ஜெட் படங்கள்.. 200 கோடியில் பாலிவுட் என்ட்ரி

Sivakarthikeyan Upcoming Projects: சிவகார்த்திகேயன் காட்டில் கடந்த சில வருடங்களாகவே அதிர்ஷ்ட மழை தான் பெய்து வருகிறது. டாக்டர் மற்றும் டான் போன்ற இரண்டு படங்கள் அவரை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்று இளைஞர்கள் கொண்டாடும் ஹீரோவாக மாற்றியது. இருந்தாலும் அவருக்கு பிரின்ஸ் படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்திருந்த நிலையில், சமீபத்தில் ரிலீசான மாவீரன் படம் அவருடைய மார்க்கெட்டை பெரிய அளவில் தூக்கிவிட்டு இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் வசம் ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள் இருக்கின்றன.

மாவீரன் படத்திற்கு முன்பே அயலான் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி இருந்தாலும் சில தொழில்நுட்ப வேலைகள் பாக்கி இருந்ததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய லேட் ஆனது. ஏலியன் போன்ற சயின்ஸ் பிக்சன் கதையை காமெடி கலந்து சொல்லி இருக்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடியாகும். சமீபத்தில் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 வது படத்தில் உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து இருக்கிறார். கமல் தொடர்ந்து இளம் ஹீரோக்களின் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் சிவா நடிக்கும் படத்திற்கு கிட்டத்தட்ட 150 கோடியை பட்ஜெட்டாக ஒதுக்கி இருக்கிறார். இது அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ஆகும்.

அஜித்துக்கு தீனா, விஜய்க்கு துப்பாக்கி போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருக்கிறார். இது கிட்டத்தட்ட முருகதாஸுக்கு இரண்டாவது இன்னிங்ஸ்தான். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி ஆகும்.

சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து படம் பண்ண இருக்கிறார். வெங்கட் பிரபு தற்போது தளபதி 68 வேலையில் பிசியாக இருப்பதால் இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிவா மற்றும் இவரது கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகலாம். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ஆகும்.

தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் அதிகம். இப்போது இந்தி திரை உலகிலும் கால் பதிக்க இருக்கிறார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி என சொல்லப்படுகிறது.

- Advertisement -

Trending News