நிழல்கள் ரவி பயமுறுத்திய 5 பேய் படங்கள்.. பேய் மாமா என பதறிய சின்னஞ்சிறுசுகள்

1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் நிழல்கள். இந்த படத்தில் அறிமுகமானதால் தான் இவருக்கு நிழல்கள் ரவி என்னும் பெயர் வந்தது. இவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார். நிழல்கள் ரவி தன்னுடைய நடிப்பின் தொடக்க காலங்களில் அதிகமான பேய் படங்களிலும் நடித்துள்ளார். இதில் 13 ஆம் நம்பர் வீடு, யார் மிகவும் முக்கியமான படங்கள்.

அதிசய மனிதன்: விஞ்ஞானிகளால் உருவாக்கப்படும் யாரும் அழிக்க இயலாத மனிதன் ஒருவன், வெறி பிடித்தார் போல் பலரையும் கொலை செய்கிறான். அவனிடம் இருந்து கௌதமியையும் அவருடைய நண்பர்களையும் நிழல்கள் ரவி காப்பாற்றுவார். திகில் நிறைந்த இந்த படத்தை இயக்குனர் பிரபாகர் இயக்கி இருக்கிறார். 1990 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது.

Also Read : இந்த காலத்து நிழல்கள் ரவி என பெயர் எடுக்கும் நடிகர்.. சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டும் ஹீரோ

ராசாத்தி வரும் நாள்: ராசாத்தி வரும் நாள் 1991 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம். இந்த படத்தில் நிழல்கள் ரவி, கஸ்தூரி, நாசர், ராதாரவி, தியாகு, பாலாம்பிகா, ராஜேஷ்குமார், ஏ.கே. வீராசாமி, மயில்சாமி, மார்த்தாண்டம், வாசுகி, வாமன் மாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.

யார்: இயக்குனர் சக்தி கண்ணன் இயக்கத்தில் யார் படத்தை S தாணு தயாரித்து இருந்தார். அர்ஜுன், நளினி இந்த படத்தில் நடித்திருந்தனர். சாத்தானால் உருவாக்கப்படும் மனிதனால் பூமியில் நடக்கும் மர்மங்களை மய்யமாக கொண்ட கதை. இந்த படத்தில் நிழல்கள் ரவி அர்ஜுனின் நண்பராக நடித்திருப்பார்.

Also Read : தியேட்டரில் பதற வைத்த 8 பேய் படங்கள்.. உச்சகட்ட பயத்தை காட்டிய மிஸ்கின்

மை டியர் லிசா: நிழல்கள் ரவி, சாதனா, மனோரமா நடித்து 1987 ஆம் ஆண்டு ரிலீசான திகில் படம் தான் மை டியர் லிசா. இந்த படத்தில் கதாநாயகனான ரவி, தன்னுடைய காதலி லிசாவை வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்து தனக்கு சொந்தமான பங்களாவில் தங்க வைத்திருப்பார். லிசா ரவியின் நண்பர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பார். பின்னர் ரவி திருமணம் செய்து கொள்ளும் சாதனாவின் உடலில் லிசா ஆவி புகுந்து தன்னை கொன்றவர்களை பழி வாங்கும்.

13 ஆம் நம்பர் வீடு: 90 களில் பயங்கரமான திகில் படம் என்றால் அது 13 ஆம் நம்பர் வீடு தான். 13 ஆம் நம்பர் உடைய ஒரு வீட்டிற்கு அண்ணன், தம்பி கொண்ட குடும்பத்தார் புதுசாக குடியேறுகின்றனர். அதன் பின்னால் அங்கு மர்மமான சம்பவங்கள் நடைபெறுகின்றது. இதை அவர்கள் கண்டுபிடித்து அதிலிருந்து தப்பிக்க முயல்வது தான் படத்தின் கதை. தற்போது பேய் படங்களுக்கு பிரபலமான சுந்தர்.சி-கே டஃப் கொடுப்பது இந்த படம்தான்.

Also Read : கமல், ரஜினி நடிப்பில் வெளிவந்த 5 பேய் படங்கள்.. 890 நாட்கள் ஓடி சாதனை படைத்த தலைவரின் படம்

Next Story

- Advertisement -