கமல், ரஜினி நடிப்பில் வெளிவந்த 5 பேய் படங்கள்.. 890 நாட்கள் ஓடி சாதனை படைத்த தலைவரின் படம்

சமீபகாலமாகவே தமிழ் திரை உலகில் பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பல பிரபலங்களும் பேயாக மாறி நம்மை மிரட்டி வருகின்றனர். அதேபோன்று அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட திரைப்படங்களும் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அன்றைய காலகட்டத்திலேயே கமல் மற்றும் ரஜினி இருவரும் சில பேய் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அந்தப் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படங்கள் என்ன என்பதைப் பற்றிக் காண்போம்.

ஆயிரம் ஜென்மங்கள்: ரஜினி, விஜயகுமார், பத்ம பிரியா, லதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதில் ரஜினி தன் தங்கையின் உடலில் இருக்கும் பேயை விரட்டுவதற்கு போராடுவார். அதேபோன்று இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை ஈர்த்தது. இந்த கதையை மையப்படுத்தி தான் தற்போது அரண்மனை படமும் வெளியானது.

சந்திரமுகி: பி வாசு இயக்கத்தில் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தத் திரைப்படம் இதுவரை எந்த திரைப்படங்களும் செய்யாத பல சாதனைகளை புரிந்தது. கடந்த 2005ல் வெளியான இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பல கோடி ரூபாயை வசூலித்து. இதில் டாக்டராக நடித்திருக்கும் ரஜினியும், சந்திரமுகியாக மாறும் ஜோதிகாவும் நடிப்பில் அசத்தி இருப்பார்கள். இப்படம் ரஜினிக்கு அவருடைய திரை வாழ்வில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாகும்.

வயநதன் தம்பன்: கமல்ஹாசன், லதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படம் ஆகும். 1978ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

கல்யாணராமன்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அதில் அப்பாவியாக இருக்கும் ஒரு கமலை எதிரிகள் கொன்று விடுவார்கள். அவர் பேயாக மாறி செய்யும் வேலைகள் தான் இந்த படத்தின் கதை. மிகவும் காமெடியாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

ஜப்பானில் கல்யாணராமன்: கல்யாணராமன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான இந்தப் படம் முழுக்க முழுக்க ஜப்பானில் படமாக்கப்பட்டது. இதில் கமலுக்கு ஜோடியாக ராதா நடித்து இருப்பார். முந்தைய படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.