கார்த்தியின் மறக்க முடியாத மீண்டும் பார்க்கத் தூண்டும் 7 ஹிட் படங்கள்..17 வருஷத்தில் மகான் செய்த சாதனை

Actor Karthi completed 17 years in Tamil cinema: இன்றுடன் 17 வருடங்களை நிறைவு செய்த பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கார்த்தி தமிழ்திரை உலகின் ஜாம்பவான் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று மக்களுக்கு பிடிக்கும் வகையில் தனது தேர்ந்த நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்கும் இந்த தீரன் தனது வெற்றி படங்கள் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

சிவாவின் எவர்கிரீன் மூவியான சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தி இரு வேடங்கள் ஏற்று ராக்கெட் ராஜாவாகவும் ரத்தினவேல் பாண்டியனாகவும் வீரத்திலும்  நகைச்சுவையிலும் ரசிகர்களை உணர்ச்சி பொங்க வைத்தார்.

அம்மாவை தவிர வேற யார் காலையும்  விழ மாட்டான் இந்த கொம்பன் என்று   ராஜ்கிரனிடம் சண்டித்தனம் பண்ணும் கார்த்தி இறுதியில் இந்த மாமனாருக்காக மருமகனாக அல்லாமல் மகனாக உயிரை காப்பாற்றி கொடுத்து தாய்மார்களின் கைதட்டலை பெற்று உயர்ந்தார்.

தனது குடும்ப ஒற்றுமைக்காக எந்த எல்லைக்கும் போக தயாரான இந்த கடைக்குட்டி சிங்கம் பல அதிரி புதிரி வேலைகளை செய்து அக்கா பொண்ணுகளை சமாதானம் செய்து குடும்பத்தினரை ஒன்றாக இணைத்து குடும்ப புகைப்படம் எடுத்து சபாஷ் வாங்கி விடுவார். அதுமட்டுமா இறுதி காட்சியில் பெண் குழந்தை பிறந்தவுடன் “குழந்தை ஆணா பெண்ணா என்பது முக்கியம் அல்ல! குழந்தையை நாம எப்படி வளர்க்கிறோம்கிறதுல தான் இருக்கு!” என்று  பிற்போக்கான இந்த சமூகத்திற்கு சாட்டையடி கொடுத்திருப்பார்.

Also read: அதிகாரப்பூர்வமாக அஜித் இயக்குனரை கழட்டிவிட்ட கமல்.. மீண்டும் கார்த்திக்கிடம் தஞ்சம்

ஹச் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் திரைப்படம் கார்த்தியின் நடிப்பு திறமையையும், நடிப்பில் அவருக்கு இருந்த தாகத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தியது.  கொள்ளைக்காரனை கண்டுபிடிக்க அவர் மேற்கொண்ட  முனைப்பை பார்வையாளர்களின் உணர்வின் வழியே கடத்தி இறுதிவரை பரபரப்புடன் இருக்கை நுனியில் அமர செய்திருந்தார் கார்த்தி

சுவரை வைத்து பேசப்பட்ட அரசியல் தான் மெட்ராஸ். மக்களுக்கு என்ன தேவை நாம் எதை செய்ய வேண்டும் என்பதை உணர்ச்சி பெருக்குடன் கூறி  காதல் மற்றும் நட்பு இரண்டையும் பேலன்ஸ் செய்து சமூக அக்கறையுடன் நடித்திருந்தார் கார்த்தி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதியாக வந்த டில்லி ஆக்சன் உடன் கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கைது செய்தார் எனலாம். கார்த்தியின் கேரியரில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உச்சமடைந்த கைதியின் அடுத்த பாகத்திற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இது தவிர மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வந்திய தேவனாகவும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனாகவும் நடித்து இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு அவர் நடிப்பை பேசும்படி செய்து விட்டார் கார்த்தி.

Also read: ஓவர் நம்பிக்கை உடம்புக்கு ஆகாது.. ஒரே படத்தில் தயாரிப்பாளரின் சோலிய முடிச்சு அனுப்பிய கார்த்தி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்