ஓவர் நம்பிக்கை உடம்புக்கு ஆகாது.. ஒரே படத்தில் தயாரிப்பாளரின் சோலிய முடிச்சு அனுப்பிய கார்த்தி

Karthi starrer movie which caused huge loss to the producer: லோகேஷின் இயக்கத்தில் 2019 ல் கார்த்தி நடித்து சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படம் “கைதி” விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து உலக அளவில் மொத்தமாக 110 கோடியை தாண்டி வசூலில் சிறப்பான இடத்தை பெற்றது.

தரமான திரைக்கதை,சரியான விளம்பரம், போதுமான பட்ஜெட் என அனைத்துமே சரிவர பெற்று வசூலில் பல மடங்கு லாபத்தை ஈட்டியது “கைதி” என அதன் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது வலைதளத்தில் பதிவிட்டார். அதே தயாரிப்பாளரை ஜப்பான் படத்தின் மூலம் கதற வைத்து விட்டார் கார்த்தி.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அனு இம்மானுவேல் நடித்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் 25 ஆவது திரைப்படம் ஜப்பான். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

Also read: நீங்க எல்லாம் வரலைன்னு யாரு அழுதா.? விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார், கார்த்தி

ஜப்பான் பட வெளியீட்டின் போது படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்று கூறினார் கார்த்தி. இவர் ஒரு முறை இணைந்த ஒருவருடன் மறுபடியும் சேர்வது என்பது குதிரை கொம்பு. ஆனால் கைதியின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுடன்  ஜப்பான் படத்திற்காக மீண்டும் இணைந்தார்.

தேசிய விருது வென்ற ஜோக்கர் திரைப்படத்தின் இயக்குனர் ராஜீ முருகன் மற்றும் கார்த்தியின் காம்போ என்பதால் அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டது ஜப்பான். படத்தை எதிர்கொண்ட ரசிகர் ஒருவர், முதல் பாதி, இரண்டாம் பாதி என தரம் பிரித்து இறுதியில் இரண்டுமே வேஸ்ட் என்று கூறிவிட்டு சென்றார்.

இயக்குனரின் போக்கில், கார்த்தி நடித்திருந்தால் கூட இவ்வளவு அடி வாங்கி இருக்காது. கார்த்தி ஓவர் கான்ஃபிடண்டா நடித்து மொத்தமும்  சொதப்பி உள்ளார் என்பது  சினிமா ஆர்வலர்களின் கூற்று. தாமோன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல் ரசிகர்கள் வேறு விதமாக நினைத்து, படம் மொத்தமும் சொதப்பி தயாரிப்பாளருக்கு 30 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.

படம் வெளிவந்து ஹிட் ஆனவுடன் ஓடிடி உரிமையை விற்று அதிலும் லாபம் பார்க்கலாம் என்று நினைத்து தயாரிப்பாளருக்கு துண்டு விழுந்தது தான் தாமதம். கார்த்தியின் மொத்த வித்தையையும் இறக்கி ஒரே படத்தில் தயாரிப்பாளர், இயக்குனர் என இருவரின் சோலியையும் முடித்து விட்டார்.

Also read: ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்