பாக்கியராஜ் நெகட்டிவ் கேரக்டரில் ஹிட் அடித்த 4 படங்கள்.. சொத்துக்காசப்பட்டு மனைவியை கொல்லும் கொடூரன்

Bhagyaraj: முந்தானை முடிச்சு” திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காய் என்றாலே சினிமாவில் ஞாபகத்தில் வருபவர் பாக்கியராஜ். படம் இயக்குவது, திரைக்கதை எழுதுவது, படம் தயாரிப்பது, இசை அமைப்பது போன்ற பல துறைகளில் சகலகலா வல்லவராக இருந்தவர். அப்படிப்பட்ட மாபெரும் நடிகர் 4 படங்களில் மட்டும்தான் எதிர்மறை கேரக்டரில் இதுவரை நடித்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம்.

16 வயதினிலே திரைப்படத்தில் பயணத்தை தொடங்கி, தற்போது உள்ள டாடா படம் வரை நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் “சுவரில்லாத சித்திரங்கள்”, கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 1979 வெளியான “புதிய வார்ப்புகள்” ஆகும். தற்போது வரை 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் எதிர்மறை கேரக்டராக நடித்தது வெறும் 4 படத்தில் மட்டும் தான்.

Also Read:காட்டுவாசியாக மாறப்போகும் ஆண்டவர்.. 3 ஹீரோக்களை வைத்து அட்லி செய்யப் போகும் சம்பவம்

சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1978இல் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமாக வெளியானது சிகப்பு ரோஜாக்கள். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டர் மணி, வடிவுக்கரசி போன்றோர் இணைந்து அமர்க்களப்படுத்திருப்பார்கள். கிட்டதட்ட தமிழ்நாட்டில் மட்டும் 175 நாட்களுக்கு திரையரங்கில் ஓடிய படம். இதில் வெயிட்டராக நடித்தார், இத்திரைப்படத்திற்கு வசனங்களை இவர்தான் எழுதியுள்ளார்.

பொய் சாட்சி: 1982ல் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான பொய் சாட்சி திரைப்படத்தில் ராதிகா, சுமித்ரா போன்றோர் கூட்டணியில் நடித்துள்ளார். பணத்திற்காக பொய் சாட்சி சொல்லும் கதாநாயகன் அதனால் சந்திக்கும் பிரச்சனையை மையமாகக் கொண்டது இந்த படம்.

Also Read:பட்ஜெட்டை முடிவு செய்த கமல்.. முழுசா முடி வளர்த்த சிம்புவுக்கு காட்டிய க்ரீன் சிக்னல்

துப்பறிவாளன்: மிஷ்கின் இயக்கத்தில் 2017இல் விஷால், பிரசன்னா கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். ஹீரோ டிடெக்டிவ் ஏஜென்ட் ஆக பல க்ரைம்களை கண்டுபிடிப்பது திரைப்படகதை ஆகும். இதில் பாக்கியராஜ் டிராவல் ஏஜென்சி நடத்திக் கொண்டிருக்கும் முத்துவாக நடித்து இருப்பார்.

விடியும் வரை காத்திரு: 1981 இல் வெளியான விடியும் வரை காத்திரு படத்துக்கு இயக்குனர், திரைக்கதை எழுதியவரும் இவரே. பாக்கியராஜ் ராஜாவாக தனது வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களையும்,காதல் சென்டிமென்ட் திரில்லர் திரைப்படமாக வெளியானது. இதில் பாக்கியராஜ் தனது மனைவியை சொத்துக்காசப்பட்டு கொன்றுவிடுவார். “மௌன கீதங்கள்” திரைப்படம் மூலம் பாக்கியராஜ் பாசிட்டிவ் கேரக்டரை பார்த்த ரசிகர்களால் இதுபோன்ற நெகட்டிவ் கேரக்டரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Also Read:விடாமுயற்சியில் நடிக்கும் விஜய்யின் அப்பா.. வெளிவந்த புகைப்படத்தின் காரணம் இதுதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்