வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விடாமுயற்சியில் நடிக்கும் விஜய்யின் அப்பா.. வெளிவந்த புகைப்படத்தின் காரணம் இதுதான்

Ajith-Vidamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் படப்பிடிப்பு தொடங்காமல் சில காரணங்களால் தாமதமாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி படப்பிடிப்பு கண்டிப்பாக தொடங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படக்குழு இதற்காக ஆயத்தமாக்கி கொண்டிருக்கிறார்களாம்.

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் கேமியோ தோற்றத்தில் மற்ற மொழி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அதிலும் ஜெயிலர் படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதேபோல் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் விஜய்யின் லியோ படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read : மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அஜித், விஜய்.. பக்கா பிளான் போட்ட மகிழ்திருமேனி

இந்த சூழலில் விடாமுயற்சி படத்திலும் மற்ற மொழி நடிகர்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பட அப்பா விடாமுயற்சியில் இடம்பெறுவதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. அதாவது ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக மலையாள நடிகர் மோகன்லால் நடித்திருந்தார்.

சமீபத்தில் மோகன்லால் மற்றும் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதை அடுத்து விடாமுயற்சி படத்தில் மோகன் லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது முற்றிலும் வதந்தியே என்பது இப்போது தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது.

Also Read : தோல்வியால் அடுத்தடுத்து விழுந்த மரண அடி.. விஜய், அஜித் பட இயக்குனரை தூக்கி விடும் சிவகார்த்திகேயன்

அதாவது அஜித்தின் நெருங்கிய நண்பர் அஜித் நம்பியார். சமீபத்தில் இவரது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள பிரபல ஹில்டன் ஹோட்டலில் தான் இந்த நிகழ்வு நடந்து உள்ளது. மேலும் இந்த விழாவில் அஜித் கலந்து கொண்ட போது ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அந்த ஹோட்டலுக்கு மோகன்லால் வந்திருக்கிறார். அப்போதுதான் இருவரும் பேசிவிட்டு புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் மோகன்லால் விடாமுயற்சி படத்தில் இடம்பெறுகிறார் என செய்தியை பரப்பி விட்டனர். மோகன்லால் இந்த படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது அஜித் ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : இந்த வருடத்தில் பாப்புலரான 10 ஹீரோக்கள்.. ஒரு படம் கூட வெளிவராமல் ஷாருக்கானை ஓரம் தள்ளிய அஜித்

- Advertisement -

Trending News