அஜித்துக்கு எதிராக கட்டம் கட்டிய சுகாசினி, மணிரத்தினம்.. பத்தே நாளில் படத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதன் பின்னணி

Ajith Kumar: ஒரு படத்தில் நடிப்பதற்கு ஹீரோ ஒப்பந்தமாவது, பின் தனிப்பட்ட காரணங்களால் விலகுவது என்பதெல்லாம் சகஜமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பொழுது நடிகர் அஜித்குமார் 10 நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் ஒரு சில காரணங்களால் நீக்கப்பட்டு இருக்கிறார். இதன் பின்னணியில் சுகாசினி மற்றும் மணிரத்தினம் இருந்திருக்கிறார்கள்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குனர் மணிரத்தினத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். பெரும்பாலும் மணிரத்தினம் தன்னுடைய படங்களை தயாரிப்பதற்கு மட்டுமே தன்னுடைய சொந்த நிறுவனத்தை பயன்படுத்தி வந்தார். பின்னர் பிற இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்களுடைய படங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

Also Read:விடாமுயற்சியின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்.. ஜெட் வேகத்தில் லண்டன் விரைந்த பட குழு

இந்த மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினராக மணிரத்தினத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுகாசினி இருக்கிறார். கதை டிஸ்கஷன், கதாபாத்திரங்கள் டிஸ்கஷன், டப்பிங், போன்ற பல விதங்களிலும் சுகாசினி தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த ஒரு படத்தில் இருந்து நடிகர் அஜித்தை நீக்கியதற்கு சுகாசினி மற்றும் மணிரத்தினம் இருவரும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்தனர். ஆனால் இந்த கேரக்டரில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான். ராஜாவின் பார்வையிலே திரைப்படத்திற்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இந்த படத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டுள்ளார்.

Also Read:கமலால் தாமதமாகும் விடாமுயற்சி.. எல்லாம் கை கூடி வரும் போது இப்படியா நடக்கணும்

அதன்பின்னர் இயக்குனர் வசந்த் உடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுகாசினி மற்றும் மணிரத்தினம் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து இயக்குனர் வசந்திடம் அஜித்தை படத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். முதலில் யோசித்த வசந்த் பின்னர் தயாரிப்பாளர்கள் என்பதால் ஒப்புக்கொண்டாராம். அதன் பின்னர் இந்த கதை பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவிடம் சொல்லப்பட்டு இருக்கிறது.

இருவரும் தனிப்பட்ட காரணங்களால் இந்த படத்தில் நடிக்காமல் போக சூர்யா இந்த படத்திற்கு தேர்வாகி இருக்கிறார். முதலில் சிவக்குமார், சூர்யா இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லையாம் . அதன் பின்னர் ஒரு வழியாக சூர்யா நடித்திருக்கிறார். விஜய் அப்போது வளர்ந்து விட்ட ஹீரோவாக இருந்தாலும் அறிமுக ஹீரோ சூர்யாவுடன் நடிப்பது எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரும் இதற்கு ஒப்புக்கொண்டாராம்.

Also Read:சூர்யாவுக்காக சிறுத்தை சிவா செய்த பிரம்மாண்டம்.. ரஜினி, அஜித்தை டீலில் விட இதுதான் காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்