Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்பவே போட்ட பணத்தில் பாதியை திரும்ப எடுத்த ஆதிபுருஷ்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடியா!

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஓடிடி வியாபாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Aadipurush

Movie Aadipurush: இந்திய சினிமா உலகின் இந்த வருடத்திற்கான மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக ஆதிபுருஷ் பேசப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்திருக்கிறார். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் தற்போது இவர் நடித்திருக்கும் இந்த படம் ராமாயண கதையை தழுவலாக கொண்டு வெளியாக இருப்பது, மேலும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகும் ஆதிபுருஷ் , 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மோசமான VFX தொழில்நுட்பத்தினால் ரசிகர்களிடையே பயங்கர கேலிக்குள்ளாகியது. அதன் பின்னர் VFX தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு ட்ரெய்லரும் ஒரு காரணம்.

Also Read:ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் 5 படங்கள்.. தியேட்டரில் சோடை போனதால் ஒரே மாதத்தில் வந்த பிச்சைக்காரன் 2

முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால், அதன் பின்னால் படத்தின் கலெக்சனை பொறுத்து படம் வெற்றியா அல்லது தோல்வியா என்று சொல்வார்கள். ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு தியேட்டர் வியாபாரத்தை தாண்டி, ஓடிடி வியாபாரங்கள் பெரிசாக பேசப்படுகின்றன. ஏனென்றால் நிறைய படங்கள் ரிலீஸுக்கு முன்பே ஒரு பெரிய தொகையை வியாபாரமாக பேசி ஓடிடி தளங்களுக்கு படங்களை விற்பனை செய்து விடுகிறார்கள். தற்போது இந்த வியாபாரமும் படத்திற்கான போட்டியாக மாறிவிட்டது.

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஓடிடி வியாபாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு காரணம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே போட்ட பட்ஜெட்டில் பாதியை எடுத்து விட்டது படக்குழு. ஆதிபுருஷ் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் அமேசான் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தை அந்த நிறுவனம் 210 கோடிக்கு வாங்கி இருக்கிறது.

Also Read:பொன்னியின் செல்வனால் ஆதிபுருஷுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. மொத்த சீட்டுமே அனுமாருக்கு தானா?

இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் 210 கோடியை இப்போது சம்பாதித்து விட்டது இந்த படம். வரும் ஜூன் 16ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒரு சில திரையரங்குகளில் 2200 வரை டிக்கெட் விலை இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்தியா முழுவதும் 6000 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் முதல் இரண்டு நாள் வசூலிலேயே 200 கோடியை இந்த படம் அள்ளிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை யோசிப்பதற்கு முன்பே, போட்ட பணத்தை விட பல மடங்கு லாபத்தை பட குழு எடுத்து விடும். படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களுக்குப் பிறகு அமேசான் ஓடிடி தளத்தில் ஆதிபுருஷ் வெளியாக இருக்கிறது.

Also Read:ஆதிபுருஷ் விமர்சனம் கிளப்பிய பீதி.. 600 கோடியும் முதலை வாயில் போட்ட கதையா?

Continue Reading
To Top