அன்னபூரணி நெட்பிலிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டதன் உண்மை காரணம்.. தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின் முழு விபரம்

Annapoorani Controversey: உலை வாய மூடினாலும் ஊர் வாய மூட முடியாதுன்னு சொல்வாங்க, அது நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்திற்கு தான் சரியாக இப்போது பொருந்துகிறது. நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆன அன்னபூரணி படம் நெட்பிலிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தி நேற்று பயங்கர வைரலாகியது. உண்மையில் இந்த படத்தை எதிர்ப்பதற்கான முழு காரணம் என்ன என தற்போது சமூகவலைதங்களில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஒரு பெண், அசைவ சாப்பாடு இதை சுற்றி தான் இந்த படத்தின் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. ரொம்ப கண்டிப்பான வீட்டில் வளர்க்கப்படும் பெண் அவள் விரும்பும் சமையல் கலையை கற்றுக் கொண்டு, அதில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற நல்ல ஒரு கதை களத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம், ஒரு சில காட்சிகளால் இன்று இந்த அளவுக்கு சர்ச்சையை சந்தித்திருக்கிறது.

குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஒரு பெண், வேற்று மதத்தை சார்ந்த ஜெய்யுடன் பழகுவதை லவ் ஜிகாத் என சொல்லி இந்த படத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் நயன்தாரா அசைவ சாப்பாட்டை சமைக்க வேண்டி வருமோ என குற்ற உணர்ச்சியில் இருக்கும் பொழுது அவரை தெளிவுபடுத்த ஜெய் ஒரு காட்சியில் ஒரு சில புராணங்களை எடுத்துக்காட்டி அந்தந்த கதைகளில் கடவுள்கள் இறைச்சி சாப்பிட்டதாக சொல்கிறார்.

Also Read:மதக் கலவரத்தால் ஓடிடி-யிலிருந்து நீக்கப்பட்ட படம்.. தர்ம அடி வாங்கும் நயன்தாராவின் மார்க்கெட்

இந்த ஒரு காட்சி தான் இப்போது இந்த படத்திற்கு கிளம்பிய மொத்த எதிர்ப்பிற்கும் முழு காரணம். அதைத் தொடர்ந்து பிரியாணி சுவையாக வரவேண்டும் என நயன்தாரா குறிப்பிட்ட மதத்தின் வழிமுறையை செய்வார். இதுவும் இப்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பெண் முன்னேற்றம் சார்ந்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஒரு சில காட்சிகளால் மொத்தமாக இது மத உணர்வை புண்படுத்துவதாக சொல்லி சில அமைப்பினர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

அறிக்கையின் முழு விபரம்

இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு சில அமைப்பினர் நெட் பிலிக்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அன்னபூரணி படத்தின் பங்கு தயாரிப்பாளர் நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  குறிப்பிட்டு இருப்பதாவது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு, நீங்கள் எங்களுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாக பரிசீலனை செய்தோம். எங்களுடைய இணை தயாரிப்பு நிறுவனமான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க இருக்கிறோம். அது வரையிலும் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து இந்த படம் தற்காலிகமாக நீக்கப்படுகிறது.

படத்தின் இணை தயாரிப்பாளர் என்ற முறையில் இந்து சமூகத்தினர் மற்றும் பிராமண சமூகத்தினரை காயப்படுத்துவது எங்களுடைய நோக்கம் இல்லை. படத்தின் காட்சிகள் எந்த வகையிலும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். என்று குறிப்பிட்டு இருக்கிறது. அன்னபூரணி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்ட பிறகு அதன் எடிட்டட் வர்ஷன் மீண்டும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது.

 

Also Read:சூர்யவம்சம் சின்ராசு போல மைக்கை பிடித்ததும் கிரிஞ்சு பண்ணிய நயன்.. பிசினஸ ஓட்ட என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு

 

- Advertisement -spot_img

Trending News