விஜய்க்கு முன்னாடியே அரசியல் களம் காணும் முக்கிய ஹீரோ.. வளைத்து போட்ட தேசிய கட்சி

LS Polls 2024: தமிழ்நாட்டுல சின்ன தெருவுல கூட இப்போ ரோடு போட்டுட்டு இருக்காங்க. குடி தண்ணீர் இல்லாத இடங்களில் பைப் போடப்பட்டு கொண்டிருக்கிறது. என்னதான் ஆச்சு நம்ம அரசியல்வாதிகளுக்கு யோசிக்கிறீங்களா.

எல்லாம் 19ஆம் தேதி நடக்க போற எலக்சன்காகத்தான். நாடாளுமன்ற தேர்தல் ஆட்டக்களம் பெரிய அளவில் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும், தமிழகத்தில் ஆளும் கட்சி தான் ஜெயிக்கும்.

நமக்கு நல்லா தெரிஞ்ச தேசிய கட்சிகள் 2 பிஜேபி மற்றும் காங்கிரஸ். இதில் காங்கிரஸ் கட்சி திமுகவை கட்டியாக பிடித்துக்கொண்டு எப்படியோ மக்கள் மனசுல இடம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பிஜேபிக்கும், தமிழகத்திற்கும் எப்போதுமே எட்டாம் பொருத்தம் தான்.

பிஜேபி கூட எந்த கட்சி கூட்டணி அமைக்கிறாங்களோ, அந்த கட்சி தமிழகத்தில் சோலி முடிந்துவிடும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், இதை கடந்த பத்து வருடமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்னவோ தமிழகத்தில் தாமரை மொட்டு கூட அரும்பிய நிகழ்வு நடக்கவில்லை.

பாஜக என்ன தான் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு அங்கு ஸ்ட்ராங்கான வேட்பாளர்கள் இல்லாததுதான் பெரிய குறை. எப்படியாவது தமிழ்நாட்டில் இருந்து ஒரு பெரிய ஆளுமையை தங்கள் கட்சியில் சேர்த்து விட வேண்டும் என்பதுதான் அந்த கட்சியின் பெரிய ஆசை.

ரஜினியை கட்டம் கட்டும் பாஜக

இதற்கு அவங்க பெரிய அளவில் வலை விரித்தது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு. அவரும் தன்னை பிஜேபிக்கு நெருக்கமான ஒரு நபராக காட்டிக் கொள்ள தயங்குவதில்லை. ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் சைலன்ட் மோடில் இருப்பதை தான் ரஜினி விரும்புகிறார்.

ஆனால் இந்த முறை பாஜக கட்சி சூப்பர் ஸ்டாரை விடுவதாக இல்லை. ஒன்று எங்கள் கட்சிக்காக இறங்கி பிரச்சாரம் செய்யுங்கள். இல்லையா, உங்க ஸ்டைல்ல எந்த கட்சிக்கு ஓட்டுன்னு ஒரு வார்த்தை மட்டும் வெளியே சொல்லிடுங்க என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பிஜேபியை சேர்ந்த நிறைய பிரமுகர்களுடன் நெருக்கமான உறவில் இருக்கிறார் ரஜினி . இப்போ அந்த கட்சி கேட்பதற்கு முடியாது என்று சொல்லிவிட்டால் அவர்களுடைய நட்பை அவமதிப்பது போல் இருக்கும். ஆனால் தமிழக மக்களிடம் பிஜேபி கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொள்ள எப்போதுமே ரஜினி விரும்ப மாட்டார்.

இப்படி ஒரு சிக்கலில் தான் இப்போது இந்த தேர்தலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார். பெரும்பாலும் அந்த கட்சி அவரிடம் வைத்திருக்கும் கோரிக்கை அவர் யாருக்கு ஓட்டு போடப் போகிறார் என்று வெளியில் சொன்னால் போதும் என்பதுதான்.

ரஜினி பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவார் என்பது அந்த கட்சி என் அதீத நம்பிக்கை. பிஜேபி கொடுக்கிற அழுத்தத்தை பார்த்தால் விஜய் சட்டமன்றத் தேர்தலை தான் எதிர்நோக்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு முன்பே நம்ம சூப்பர் ஸ்டார் நாடாளுமன்ற தேர்தலில் இறங்கி வேலை செய்யப் போவது போல் இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்