தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

Maamannan Trailer: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் மாமன்னன். மிகப் பெரும் ஆவலை தூண்டி இருந்த இப்படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில் ட்ரெய்லரும் அதை பெருமளவில் தூண்டியிருக்கிறது. அதாவது இப்படத்தில் வடிவேலு கனமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் என ஒட்டுமொத்த பட குழுவினரும் வாய்க்கு வாய் புகழ்ந்து தள்ளி இருந்தனர்.

Also read: மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

அதை உறுதிப்படுத்தும் வகையில் ட்ரெய்லரின் ஆரம்பமே வடிவேலுவின் குரலுடன் தான் தொடங்குகிறது. நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம். அதை நான் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என் வயிற்றிலிருந்து குடலை உருவி யாழாக மாற்றி அதை தெருதெருவாக மீட்டி வருவேன். உண்மையைக் கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்ற வசனத்தோடு ட்ரெய்லர் எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

அதைத்தொடர்ந்து அரசியல்வாதி வில்லனாக வரும் பகத் பாசில், ரத்தக்களரியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், புரட்சி பெண்ணாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கிறது. இதற்கிடையில் கூட்டமாக பாய்ந்து ஓடும் நாய்களும் காட்டப்படுகிறது.

Also read: மிக பெரிய எதிர்பார்ப்பு, உதயநிதிக்கு வந்த தலைவலி.. மொத்தமும் புட்டுக்குன்னு போன மாமன்னன்

இப்படியாக செல்லும் ட்ரைலரில் வடிவேலுவின் அமைதியான அதே சமயம் கெத்தான கேரக்டர் தேவர் மகன் சாயலில் இருப்பதையும் உணர முடிகிறது. அந்த வகையில் அரசியல் மற்றும் ஜாதி பிரச்சனையை இப்படம் கையில் எடுத்திருப்பது நன்றாக தெரிகிறது. இது உதயநிதி மற்றும் வடிவேலுவுக்கு எந்த மாதிரியான வரவேற்பை கொடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்