கல்யாணத்துக்கு அப்புறம் காணாம போன காதல்.. விவாகரத்துக்கு ரெடி ஆகும் நட்சத்திர ஜோடி

Gossip: வடக்கு பக்க நடிகையாக இருந்தாலும் அவர் தன்னுடைய கியூட் நடிப்பாலும் அழகாலும் அனைவரையும் ஈர்த்துள்ளார். பல சவாலான கேரக்டர்களில் நடித்திருக்கும் அந்த நடிகை பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் கூட நடித்திருந்தார்.

அதில் தனக்கு முக்கியத்துவம் குறைந்ததால் இயக்குனருடன் கூட இவர் கொஞ்சம் மன வருத்தத்தில் இருந்தார். இப்படி சில சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அந்த சாக்லேட் பாய் ஹீரோவை காதலித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

ஓவர் நெருக்கத்துடன் பழகிய இந்த ஜோடி ஆடம்பரமாக திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில் தற்போது திருமண உறவில் விரிசல் விழுந்துள்ளதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

விவாகரத்துக்கு ரெடியாகும் ஜோடி

சமீபத்தில் அந்த ஹீரோ நடித்த சைக்கோ படம் அனைவராலும் கழுவி ஊற்றப்பட்டது. ஆனாலும் வசூலுக்கு ஒன்றும் குறைவில்லை. இருந்தாலும் நடிகர் இவ்வளவு மோசமாக நடித்திருப்பது நெகட்டிவ் கமெண்ட்டுகளை கொடுத்தது.

அதேபோல் இளம் நடிகை ஒருவருடன் அவர் நெருங்கிய நட்பில் இருக்கிறாராம். இதனால் தான் இந்த ஜோடிக்குள் இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அடுத்தடுத்த விவாகரத்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பிக் கொண்டிருக்கிறது

இதில் இந்த நட்சத்திர ஜோடியும் இணைந்து விடுவார்களோ என்ற சந்தேகமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இதுதான் இப்போது பாலிவுட் திரை உலகில் பரபரப்பு செய்தியாக உள்ளது.

கணவருடன் மன வருத்தத்தில் இருக்கும் நடிகை

Next Story

- Advertisement -