ஐயோ அந்த நடிகையா அவங்க ரொம்ப மோசம்.. சண்டை கோழியாய் சீறும் அம்மணி

Gossip: நடிகைகள் என்றாலே கொஞ்சம் பந்தாவாகத் தான் இருப்பார்கள். அதில் சில நடிகைகள் சாதாரண மக்களைப் போல் வாழ்வதுண்டு. ஆனால் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஒரு நடிகை ஓவர் அட்டகாசம் செய்து வருகிறாராம்.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் இந்த நடிகை ஏகப்பட்ட பிசினசையும் செய்து வருகிறார். தற்போது குடும்பம் குட்டி என வாழ்ந்து வரும் இவர் குடியிருக்கும் இடத்தில் தினம் தினம் ஒரு பிரச்சனையாக இருக்கிறதாம்.

பிரச்சனை நடிகைக்கு கிடையாது. இவரால் குடியிருப்பு வாசிகளுக்கு தான் பெரும் அக்கப்போராக இருக்கிறதாம். ஏனென்றால் நடிகை தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லும் பேர்வழியாக இருக்கிறாராம்.

நடிகையின் இன்னொரு முகம்

அது மட்டுமில்லாமல் மொத்த அப்பார்ட்மெண்டுக்கே ஓனர் என்பது போல் அவர் அடிக்கும் லூட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது என அக்கம் பக்கத்தினர் குமுறி வருகிறார்கள். இதில் அப்பார்ட்மெண்ட்டுக்குள் யார் வந்தாலும் நடிகை கண்ணில் பட்டால் அவ்வளவுதான் ஏதாவது ஒன்று சொல்லி சண்டைக்கு பாய்கிறாராம் அம்மணி.

அது மட்டுமா அவருடைய வீட்டு வாசலில் நடிகையின் செருப்புகளை பரப்பி போட்டு எரிச்சல் ஊட்டுகிறாராம். கிட்டதட்ட 70 ஜோடிகளுக்கு மேல் இருக்கும் அந்த செருப்புகளை துடைத்து பாதுகாக்கவே ஒரு ஆள் தனியாக இருக்கிறாராம்.

மேலும் அங்கு இருக்கும் சிறு பிள்ளைகளை கூட நடிகை அடித்து விரட்டுவதாகவும் புகார் கிளம்பியுள்ளது. இதனால் உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் எப்படியாவது நடிகை புது வீட்டிற்கு போய்விட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்து வருகிறார்கள்.

நம்பர் ஒன் நடிகை செய்யும் அட்ராசிட்டி

Next Story

- Advertisement -