வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

தளபதி 67 படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதிலிருந்தே இணையத்தில் இந்த படத்தை பற்றிய பேச்சு தான் சுற்றி வருகிறது. இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்க உள்ளது. ஆகையால் தளபதி 67 டீம் காஷ்மீர் படையெடுத்து உள்ளனர்.

அதாவது தளபதி 67 படத்தில் விஜய் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் நடிக்கவிருக்கின்றனர். இப்போது தளபதி 67 படத்தின் சூட்டிங் கிட்டதட்ட 60 நாட்களில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் காஷ்மீர் செல்ல ஏர்போர்ட் சென்றுள்ளனர்.

Also Read : சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தளபதி 67 அப்டேட்.. உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா

அப்போது திரிஷா கூலர்ஸ் மற்றும் முகத்தில் மாஸ்க் போட்டு முகம் தெரியாத அளவுக்கு ஏர்போர்ட்டில் வருகின்ற போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னதாக திரிஷாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் அடிபாதாளத்தில் இருந்தது.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு அவரது குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் த்ரிஷாவுக்கு குவிந்து வருகிறது. அதிலும் விஜய், திரிஷா கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும். அதிலும் லோகேஷ் தளபதி 67 படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

Also Read : தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

ஆகையால் மீண்டும் தளபதி, திரிஷா ரொமான்ஸ்சை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் தளபதி 67 படத்தின் மூலம் திரிஷா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் தளபதி 67 படப்பிடிப்புக்காக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனும் இப்போது காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Thalapathy-67-Trisha

Also Read : தளபதி 67 படத்தில் விக்ரம் இல்லையா!. பெரிய பிளான் போட்டிருக்கும் லோகேஷ்