சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எதிர்நீச்சல் டிஆர்பியை காலி பண்ண வரும் சூப்பர் ஹிட் சீரியல்.. சிஷ்யனுக்கு குருவே வைக்க போகும் ஆப்பு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஒட்டுமொத்த சேனல்களையும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக எடுத்துக் கொண்டிருந்த சன் டிவியை தூக்கி நிறுத்தியது கூட இந்த சீரியல் தான் என்று சொல்லலாம். டிஆர்பி யில் எப்போதுமே முதலிடத்தில் இருந்து வருகிறது. மற்ற சீரியல்களில் பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளை ஒளிபரப்பினாலும் இந்த சீரியலுக்குத்தான் மவுசு அதிகமாக இருக்கிறது.

ஆதி குணசேகரனின் 40 சதவீத சொத்துக்கள் ஜீவானந்தத்திடம் போக, தற்போது பித்து பிடித்தது போல் மாறிவிட்டார் அவர். 40 சதவீதத்தில் அவர்கள் தங்கி இருக்கும் வீடும் சேர்த்து இருக்கிறது என தெரியவர தற்போது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி தானா அல்லது வீட்டில் இருக்கும் பெண்களை தன் வழிக்கு கொண்டுவர போட்ட திட்டமா என இனிவரும் நாட்களில் தான் தெரியும்.

Also Read:ஒட்டுமொத்த கதையும் ஓவர் டேக் செய்த குணசேகரனின் மகா நடிப்பு.. தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் ஜீவானந்தம்

இந்த சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற சேனல்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார்கள். எதிர்நீச்சல் சீரியலின் முக்கியமான கேரக்டர் ஆதி குணசேகரனுக்கு கூட வலை வீசி பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. தற்போது சொந்த சேனலே சூனியம் வைப்பது போல் மற்றொரு சீரியலை களம் இறக்க இருக்கிறது.

புது சீரியலினால் எதிர் நீச்சல் சீரியல் ஏன் அடி வாங்கப் போகிறது என்றால், அந்த சீரியலை இயக்கும் இயக்குனர் அப்படி. ஏற்கனவே அந்த இயக்குனர் சன் டிவியில் இயக்கிய ரெண்டு சீரியல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கின்றன. அந்த சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுது மற்ற சீரியல்கள் ரொம்பவும் டவுன் ஆக இருந்தது. தற்போது அந்த இயக்குனர் களமிறங்குவது தான் எதிர்நீச்சலுக்கு வைத்த பெரிய ஆப்பு.

Also Read:எதிர்நீச்சல் ஜீவானந்தம் செய்த மிகப்பெரிய மாற்றம்.. எந்த சீரியலிலும் செய்யாத புரட்சிகரமான செயல்

ஒரு சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சின்னத்திரை நேயர்களை கட்டி வைத்திருந்தது என்றால் அது மெட்டி ஒலி தான். தாயில்லாத ஐந்து பெண்களை கரை சேர்க்கும் தந்தை மற்றும் அந்தப் பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை மையமாகக் கொண்டு இப்படி ஒரு சூப்பர் ஹிட் சீரியலை கொடுத்தவர்தான் இயக்குனர் திருமுருகன். அடுத்து இவர் இயக்கிய நாதஸ்வரம் சீரியலும் சின்ன திரையில் பல சாதனைகளை செய்தது.

இப்போது இவருடைய இயக்கத்தில் செல்வம் என்னும் சீரியல் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக சுருதி ராஜ் நடிக்கவிருக்கிறார். திருமுருகன் பல வருடங்களாக இந்த சீரியலுக்காக கதை எழுதி தயாராக வைத்திருக்கிறாராம். அதற்குள் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வெற்றியும் பெற்று விட்டது. மேலும் திருமுருகனின் உதவிய இயக்குனராக இருந்தவர் தான் எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம். கூடிய விரைவில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் கடும் போட்டி ஆரம்பமாக இருக்கிறது.

Also Read:வில்லத்தனத்தையும் தாண்டி அழுது சிரிக்க வைத்த குணசேகரன்.. கொஞ்சம் கூட அசராமல் அடிக்கும் ஜீவானந்தம்

- Advertisement -

Trending News