நானே பலியாடாக ஆகிறேன், மலை போல் கொட்டிய காசு.. ஆவேசத்தில் ஏஆர் ரகுமான் எடுத்த முடிவு

AR Raghuman: தமிழ் சினிமாவின் ஆஸ்கார் நாயகனாக பார்க்கப்படும் ஏஆர் ரகுமான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் மழையின் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடி ஆகாது என்றும் ஏஆர் ரகுமான் அறிவித்தார். அதை அடுத்து சென்னை கிழக்கு கடற்கரைசாலையில் நேற்று இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 25 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Also Read: கமல், ஏஆர் ரகுமான் மாதிரி காலை வாரி விட தயாரான பாலிவுட்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இயக்குனர்

அது மட்டுமல்ல ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதனால் ஏஆர் ரகுமானின் இந்த இசை கச்சேரியில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு, இந்தியாவிலேயே இது மாதிரி பிரச்சனை ஏற்பட்டது இல்லை என்ற பெயர் வந்துவிட்டது. ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மக்கள் கேட்கிறார்கள்.

‘ஏன் ஏஆர் ரகுமான் இதைப் பற்றி பேசவில்லை, அவருக்காக தான் நாங்கள் வந்தோம். அவரை மட்டுமே தான் நாங்கள் குறை சொல்வோம்’ என்று கூறுகிறார்கள். இதனால் திடீரென பிரச்சனை ஏற்பட்டு பல மணி நேரம் கழித்து ஏஆர் ரகுமான் கடமைக்காக கோபத்துடன், ‘இதற்கு நானே பலியாடாக இருக்கிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார்.

Also Read: உயிர் போற நிலையில் கச்சேரி நடத்திய ஏஆர் ரகுமான்.. ஓரு டிக்கெட் 5000 கொடுத்தும் சந்தி சிரித்த சம்பவம்

அவர் சொன்னது சந்தோஷமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வளவு பெரிய மனிதர் இதுவரை இவர் மீது எந்த குறையும் வந்ததில்லை, ஏன் திடீரென இப்படி காசுக்காக ஏஆர் ரகுமான் மாறி உள்ளார் என கேட்கின்றனர். தற்போது உள்ள மியூசிக் டைரக்டர்கள் மற்றும் இளையராஜா ஒரு நிகழ்ச்சி நடத்த பொழுது ரசிகர்கள் எப்படி வருவார்கள், எங்கு உட்காருவார்கள், அவர்களுக்கான வசதிகள் என்னென்ன என்று கேட்டு தான் ஒப்புக்கொள்வாராம்.

இவ்வளவு வருடம் பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திய ஏஆர் ரகுமானுக்கு இது தெரியாதா! என்ன ஆயிற்று, ஏன் இப்படி மாறிவிட்டார் என கேள்விகள் எழுகின்றனர். இந்த விஷயத்தால் மக்கள் கொந்தளித்ததை அறிந்த ஏஆர் ரகுமான் தனது பீட்டர் பக்கத்தில், ‘இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களின் டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள். அசாதாரண சூழ்நிலையால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதில் அளிப்பார்கள்’ என்றும் பதிவிட்டிருந்தார்

Also Read: சாவு பயத்தை காட்டிய ஏ ஆர் ரகுமான்.. அனிருத்துக்கு இருக்கும் அறிவு கூட உங்களுக்கு இல்லையா.?

Next Story

- Advertisement -