உயிர் போற நிலையில் கச்சேரி நடத்திய ஏஆர் ரகுமான்.. ஓரு டிக்கெட் 5000 கொடுத்தும் சந்தி சிரித்த சம்பவம்

AR Rahman: ஏஆர் ரகுமானுக்கு தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருந்து வருகிறது. தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதைக்கு எப்போதுமே ரசிகர்கள் தலைவணங்கி வந்தனர். ஆனால் நேற்று தினம் நடந்த ஒரு நிகழ்வு அவரது பெயரை மொத்தமாக மாற்றும் விதமாக அமைந்திருக்கிறது.

பொதுவாக இசையமைப்பாளர்கள் இசை கச்சேரி நடத்துவது வழக்கம்தான். அந்த வகையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏஆர் ரகுமான் சென்னையில் இசைக்கச்சேரி நடத்தினார். இதில் கோல்டன் டிக்கெட்டின் விலை 20000 ரூபாய். அடுத்ததாக சில்வர் டிக்கெட்டின் விலை 5000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Also Read : கமல், ஏஆர் ரகுமான் மாதிரி காலை வாரி விட தயாரான பாலிவுட்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இயக்குனர்

இசை பிரியர்கள் ஏஆர் ரகுமானின் இசை கச்சேரியை பார்க்க வேண்டும் என்பதற்காக பல ஆயிரம் கொடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தரும் நிகழ்வாக தான் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி இருந்திருக்கிறது. அதாவது இந்த நிகழ்வின் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் மிகுந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொறுமை காத்து வந்த நிலையில் அங்கு நிற்பதற்கு கூட இடம் இல்லையாம். கூட்ட நெரிசலில் சிலர் உயிர் தப்பி உள்ளனராம். அதோடு இல்லாமல் தன்னுடைய குழந்தையைக் காணவில்லை என்று கூட பெற்றோர் அழுத வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. சரியான முன்னேற்பாடு செய்யாததே இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Also Read : டெலிட் ஆன பாடல்களை ஓவர் நைட்டில் மிரட்டிவிட்ட ஏ ஆர் ரகுமான்.. லாஜிக் ஓட மேஜிக்காய் மாறிய சம்பவம்

அவ்வாறு உயிர் போற நிலையிலும் ஏஆர் ரகுமான் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த செயலுக்கு சரியான காரணம் மற்றும் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் அதிரடி காட்டி வருகிறார்கள். தங்களது இசை கச்சேரிக்கு வருபவர்களின் பாதுகாப்புக்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கூட்ட நெரிசலால் பல அசம்பாவித செயல்கள் அங்கு ஏற்பட்டிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த பலர் ஏஆர் ரகுமான் இசை கச்சேரியால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்வால் தங்களது ஆதங்கத்தை ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துள்ளனர். அந்த வீடியோக்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவனம் அங்கு நடந்த குளறுபடிக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி டிக்கெட் வாங்கியும் இசைக்கச்சேரி பார்க்க முடியாதவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Also Read : ஏஆர் ரகுமானை ஓரங்கட்டிய அனிருத்.. 8 பிரம்மாண்ட படங்களை கையில் வைத்திருக்கும் ராக் ஸ்டார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்