கமல், ஏஆர் ரகுமான் மாதிரி காலை வாரி விட தயாரான பாலிவுட்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இயக்குனர்

Kamal, AR Rahman: பாலிவுட் சினிமாவை பொறுத்தவரையில் நிப்போட்டிசம் அதிகம் இருப்பதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. அதாவது அங்கு வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். இதனால் புதிய நடிகர்களை அங்கு வளர விடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. திறமை இருந்தும் சில நடிகர்கள் அங்கு ஜொலிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் பெரிய நடிகர்களின் வாரிசுகள் தான் அங்கு படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் தான் தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடித்தாலும் பாய்காட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற கோலிவுட் சினிமா பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

Also Read : அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

இந்த படம் வெற்றி அடைந்தால் அடுத்தடுத்து இங்கு உள்ளவர்கள் பாலிவுட்டில் படையெடுப்பார்கள் என்பதற்காக ஜவான் ரிலீசுக்கு முன்பே படத்தை ட்விட்டரில் பாய்காட் செய்து வருகிறார்கள். இதற்கு முன்னதாக தமிழ் நட்சத்திரங்களான கமல் மற்றும் ஏஆர் ரகுமான் போன்றோரையும் பாலிவுட்டில் வளர விடாமல் செய்து இருக்கின்றனர்.

இப்போது எல்லார் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டும் படியாக அட்லீ தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். அதாவது பாலிவுட்டில் எவ்வளவோ பெரிய இயக்குனர்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் இருந்து அட்லீ சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் படத்தை இயக்குகிறார். இதுவே பாலிவுட் சினிமா வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.

Also Read : மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ஷாருக்கான்.. ரெட் ஜெயண்டால் அட்லீ கூட்டணிக்கு விழப் போகும் மரண அடி

ஏனென்றால் அங்கு உள்ள இயக்குனர்களை காட்டிலும் ஷாருக்கான் அட்லீ மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இதன் வெளிப்பாடாக தான் ஷாருக்கானின் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஜவான் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் மட்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால் இனி தமிழ் இயக்குனர்களின் ஆதிக்கம் பாலிவுட்டில் அதிகமாக இருக்கும்.

இதற்குப் பிள்ளையார் சுழி போட்டதாக அட்லீ இருப்பார் என எதிர்பார்க்கலாம். என்னதான் ஜவான் படத்திற்கு ரிலீசுக்கு முன்பே எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கிறது.

Also Read : விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -