மார்க்கெட் போன இயக்குனர்.. பா ரஞ்சித்தை சரமாரியாக விமர்சித்த பிரபலம்

Pa Ranjith : பா ரஞ்சித் மற்ற இயக்குனர்களை காட்டிலும் வித்தியாசமான கதைகளத்துடன் படங்களை எடுத்து வருகிறார். ஒரு புறம் தயாரிப்பாளராகவும் நல்ல படங்களை தயாரித்தவர். சமீபத்தில் அவரது தயாரிப்பில் உருவாகி இருக்கும் ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித் பேசியது சர்ச்சையானது.

அதாவது அயோத்தி விழாவில் ரஜினி கலந்து கொள்ள சென்ற போது செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை கூறியிருந்தார். 500 ஆண்டுகளாக போய்க்கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இது மிகவும் முக்கியமான நாள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ப்ளு ஸ்டார் இசை விழா மேடையில் பேசிய பா ரஞ்சித் இன்று முக்கியமான நாள் வீட்டில் கற்பூரம் ஏற்றாமல் போனால் நாமும் தீவிரவாதி என்று ஆகிவிடுவோம் என விமர்சித்திருந்தார்.

பா ரஞ்சித் ரஜினியின் காலா, கபாலி போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ரஜினியின் கருத்தில் தனக்க உடன்பாடு இல்லை என்று ரஞ்சித் வெளிப்படையாக கூறுகிறார். அதாவது அவர் கோயிலுக்கு போவது தனிப்பட்ட விருப்பம். ஆனால் 500 வருட பிரச்சனை தீர்ந்து விட்டதாக கூறியிருப்பது தனக்கு உடன்பாடு இல்லை.

Also Read : அயோத்தி பக்கம் அத்தனை கோடிகளை வளைத்த அமிதாப்.. ரஜினி முதல் இப்பவே வளைக்கப்படும் விஐபிகள்

இதற்குப் பின்னால் மத அரசியல் இருப்பதாக பா ரஞ்சித் பேசி இருந்தார். மேலும் ரஜினி பேசுவதில் கருத்து என்பதை விட விமர்சனம் தனக்கு இருப்பதாக கூறியிருந்தார். இதை அடுத்து பா ரஞ்சித்தை விமர்சித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

அதாவது மார்க்கெட் போன இயக்குனர்களின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். மேலும் அண்ணாமலையின் கருத்துக்கும் பா ரஞ்சித் கண்டிப்பாக தன்னுடைய விமர்சனத்தை வைப்பார். ஆகையால் இந்த பிரச்சனை இத்துடன் முடியாமல் இன்னும் கருத்து யுத்தம் தொடர்ந்து கொண்டு தான் இருக்க போகிறது.

Also Read : அயோத்திக்கு மோடி கூப்பிட்டும் தெனாவட்டு காட்டிய 6 பிரபலங்கள்.. வேலை கெடக்குதுன்னு விவசாயம் செய்த தல தோனி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்