Connect with us
Vijay ajith ai image

Tamil Movie News

விடாமுயற்சி, தளபதி 68-ல் இருக்கும் ஒற்றுமையான விஷயங்கள்.. அட! ரிலீஸ் தேதியும் ஒன்னா?

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கும், விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள்

Vidamuyarchi vs Thalapathy 68: நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமார் இருவருமே இப்போது ஒரே நேரத்தில் படு பிஸியாக தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்கள். இதனாலேயே அவருடைய ரசிகர்களுக்கு இந்த இரண்டு படங்களின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. வாரிசு மற்றும் துணிவு படங்கள் மோதியதைப் போல், அடுத்து ஒரு ரணகளமான போட்டியை தான் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தளபதி விஜய் வாரிசு படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து ரிலீஸ் செய்து விட்டார். அதன் பின்னர் தான் தளபதி 68 படத்தை ஆரம்பித்து இருக்கிறார். அஜித்துக்கு விடாமுயற்சி படம் அப்படி அமையவில்லை. கிட்டத்தட்ட துணிவு படம் ரிலீஸ் ஆகி பல மாதங்கள் கழித்து தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து இருக்கிறது.

விடாமுயற்சி மற்றும் தளபதி 68 படத்தின் ஒற்றுமைகள்

இருந்தாலும் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. விடாமுயற்சி மற்றும் தளபதி 68 இரண்டுமே மல்டி ஸ்டார் கூட்டணியை கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டு படங்களுமே தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read: அரசியல், சினிமா என இருதலைக்கொல்லியாய் மாறிய விஜய்.. அவரை பார்த்து பயந்து தான் கன்ஃபார்ம் ஆன தளபதி-69

அஜித் குமார் வாலி படத்திலேயே தன்னுடைய இரட்டை வேட நடிப்பை ஆரம்பித்துவிட்டார். வரலாறு படத்தில் மூன்று ரோல்களில் நடித்து அசத்தி இருந்தார். விஜய் அழகிய தமிழ் மகன் படத்தில் தான் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார். இப்போது விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேட கேரக்டர்களில் நடிப்பது போல் தளபதி 68 படத்தில் விஜய்க்கும் இரட்டை வேடங்கள் தான்.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய உடல் எடையை 10 கிலோ வரை குறைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு காரணம் விடாமுயற்சி படத்தில் வரும் ஒரு கேரக்டர் ரொம்பவும் இளமையாக காட்டப்பட இருப்பதுதான். அதேபோன்றுதான் தளபதி 68 படத்தில் ஒரு கேரக்டர் ரொம்பவும் இளமையாக காட்டப்பட இருக்கிறது. அதற்கு டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜான் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதே போன்று தான் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பும் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் விடாமுயற்சி படத்தை அஜித்தின் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். அதே போன்று தளபதி 68 படத்தையும் விஜய் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Also Read: தளபதி-68 படத்தின் ரிலீஸ் தேதி இதுதானாம்.? இரண்டு நாட்களை குறி வைத்த விஜய்

Continue Reading

More in Tamil Movie News

To Top