அதிகமாக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கு பெயிலியர் கொடுத்த நடிகைக்கு இவ்வளவு சம்பளமா?

Top 10 highest paid actresses: ஒரு காலத்தில் ஹீரோக்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது ஹீரோயின்களும் எந்த விதத்தில் குறைந்தவர்கள் இல்லை என்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் அந்த ஹீரோயின்களுக்கு இருக்கும் ரசிகர்கள், பெயர், புகழ், அவர்கள் நடித்த படத்தின் வெற்றி இதையெல்லாம் தீர்மானித்து அதன் அடிப்படையில் அதிக சம்பளத்தை டிமாண்ட் பண்ணுகிறார்கள்.

இதனால் தயாரிப்பாளர்களும் வேறு வழி இல்லாமல் அவர்கள் கேட்கும் சம்பளத்தை வாரி இறைக்கிறார்கள். அப்படி இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் யார் என்று பார்ப்போம்.

கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள்

தீபிகா படுகோன்: அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பது இவர்தான். அந்த வகையில் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 15 முதல் 30 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். கடைசியாக இவர் நடித்த ஜவான் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து இவரை அடுத்த கட்ட லெவலுக்கு உயர்த்தி விட்டது.

கங்கனா ரனாவத்: க்ரிஷ் 3, தனு வெட்ஸ் மனு, குயின் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். அதே மாதிரி தமிழில் தாம் தூம், சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 27 கோடி வரை சம்பளத்தை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி பெற்று எம்.பி-யாக இருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா: தமிழன் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவர் பாலிவுட்டுக்கு சென்று பல வெற்றி படங்களை கொடுத்து பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறார். அதே மாதிரி ஹாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அதனால் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 25 கோடி வரை சம்பளத்தை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறார்.

கத்ரீனா கைஃப்: இவர் மைனே பியார் க்யூன் கியா, ஏக் தா டைகர், தூம் 3, பாங் பாங், டைகர் 3 போன்ற அதிரடி பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேரி கிறிஸ்மஸ் படத்திலும் மேரி கிறிஸ்மஸ் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றி பெறாமல் பெய்லியர் ஆகிவிட்டது. இருந்தாலும் இவருடைய சம்பளம் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 20 கோடி வரை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார்.

ஆலியா பட்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக ஜொலித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

கரீனா கபூர்: பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவராக கரீனா கபூர் இடம் பிடித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 8 கோடி முதல் 18 கோடி வரை சம்பளத்தை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

ஷ்ரத்தா கபூர்: ஆஷிகி 2, ஸ்ட்ரீ, சிச்சோர் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் நடிக்கும் படங்களில் சம்பளமாக 7 கோடி முதல் 15 வது கோடி வரை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

வித்யா பாலன்: பா, இஷ்கியா, “தி டர்ட்டி பிக்சர், கஹானி, மங்கள் மிஷன், மற்றும் தமிழில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்கள் முக்கால்வாசி வெற்றி பெற்ற நிலையில் ஒரு படத்திற்காக 6 கோடி முதல் 14 கோடி வரை சம்பளத்தை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

அனுஷ்கா சர்மா: ரப் நே பனா தி ஜோடி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படமே எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் அடித்ததால் இவருக்கு ஏகபோக வரவேற்பு அடுத்தடுத்த படங்களில் கிடைக்க ஆரம்பித்து விட்டது. அதனால் இவருடைய சம்பளத்தை டிமாண்ட் பண்ணி கேட்டு ஒரு படத்தில் நடிப்பதற்காக 6 கோடி முதல் 12 கோடி வரை சம்பளத்தை பெற்று ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்: முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்காவிட்டாலும் இவர் நடிக்கும் படங்களில் 10 கோடி சம்பளம் இருந்தால் மட்டுமே கமிட் ஆகி நடிப்பார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் இவருடைய நடிப்பை தூள் கிளப்பி மற்ற நடிகைகளை ஓரம் கட்டி விட்டார்.

Next Story

- Advertisement -