5 பிரபலங்கள் வெளிப்படையாய் ஒத்துக் கொண்ட வியாதிகள்.. ஸ்ருதிஹாசனுக்கு நின்று போன கல்யாணம்

5 illnesses openly accepted by celebrities: என்னதான் பேரு, புகழ், பணம் என சம்பாதித்துக் கொண்டு பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் வருகிற நோய் இவர்களுக்கு தான் வர வேண்டும் அவங்களுக்கு வரக்கூடாது என்று வரையறை போட்டு வருவதில்லை. எந்த நேரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் சொல்ல முடியாத அளவிற்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. நம் உடல்நலத்தில் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் சில நோய்களை நம் அனுபவித்து தான் ஆகணும்.

அப்படி சினிமா பிரபலங்களாக இருப்பவர்கள் பலரும் இந்த வேதனை அனுபவித்திருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் சில ஆர்டிஸ்ட்கள் தனக்கு வியாதிகள் இருந்து அவதிப்பட்டு வந்ததை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றும் அவர்களுக்கு என்ன நோய் வந்து அவஸ்தைப் பட்டார்கள் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

நோயால் அவஸ்தப்படும் பிரபலங்கள்

பகத் பாசில்: இவர் ஆரம்பத்தில் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் விக்ரம் மற்றும் மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் மேடையில் வெளிப்படையாக சொன்ன விஷயம் இவருடைய வியாதியை பற்றி தான். அப்படி இவருக்கு என்ன நோய் இருக்கிறது என்றால் ADHD. அதாவது மூளை சம்பந்தப்பட்ட கவனக் குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு. அதாவது எல்லா விஷயங்களிலும் கவனக்குறைவாகவும் ஓவர் ஆக்டிவாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட இந்த நோய் இவருக்கு 41 வயதில் தான் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்.

அல்போன்ஸ் புத்திரன்: நேரம், பிரேமம் போன்ற படங்களை எடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளது. இந்த குறைபாடு உள்ளவர்கள் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மனதை இறுக்கமாக வைத்து வழக்கத்திற்கு மாறாக செயல்பாடுகளை செயல்படுத்தி வருவார்கள். இதை இவரை ஒத்துக் கொண்டு என்னால் தொடர்ந்து படங்களை எடுப்பதில் கவனம் செலுத்த முடியாது. அந்த வகையில் என்னால் முடிந்த வரை குறும்படங்கள், பாடல்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ஓடிடியில் வெளியீடு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

சமந்தா: உச்சாணி கொம்பில் கொடிகட்டி பறந்து வந்த சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை பாதிப்பால் ரொம்பவே அவஸ்தைப்பட்டு வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தாலும் இன்னும் பழைய மாதிரி எதிலும் முழு கவனத்தை செலுத்த முடியாமல் அவ்வப்போது துவண்டு போய் இருக்கிறார்.

சுருதிஹாசன்: நடிப்பில் அப்பா லெவலுக்கு வரவில்லை என்றாலும் ஏதோ அவரால் முடிந்த அளவுக்கு ஒரு சில படங்களை கொடுத்து வந்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால் அக்கட தேசத்திற்கு சென்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்.

அப்படிப்பட்ட இவர், காதலிக்கும் காதலனை அறிமுகப்படுத்தி இவரை நான் கல்யாணம் பண்ணப் போகிறார் என்று கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் வந்த தகவலின் படி அந்த கல்யாணம் நின்று போய் விட்டதாகவும் அதற்கு ஸ்ருதிஹாசனுக்கு இருக்கும் நோய்தான் காரணம் என்றும் குறிப்பிடத்தக்கது. சுருதிஹாசனுக்கு இருக்கும் நோய் என்னவென்றால் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் டிஸ்மெனோரியா அதாவது மாதவிடாயின் போது கடுமையான வலியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள். இதனால் தான் இவருடைய காதல் கல்யாணம் பாதியிலேயே முடிந்து போய்விட்டது.

ராணா டகுபதி: தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் பாகுபலி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு இருக்கும் நோய் என்னவென்றால் சிறுநீரகப் பிரச்சனை. அதற்கு சமீபத்தில் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

Next Story

- Advertisement -